ஆண்களை விட பெண்கள் குறைவாகவே உழைக்கின்றனர்: ஆய்வில் தகவல்

22/05/2011 09:34

கனடாவின் ஊழியர் படைக்குள் பிரவேசிக்கவுள்ள பெண்கள் ஆண்களை விட குறைவாகவே உழைப்பர் என்று அது சமபந்தமாக நடத்தப்பட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

கனடாவின் மூன்று பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள் 23000 பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கி இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இதில் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே சம்பாதிப்பர் என்பதும், அவர்கள் பதவி உயர்வுகளுக்காக ஆண்களை விட நீண்ட காலம் காத்திருப்பர் என்பதும் தெரியவந்துள்ளது.

 

பெண்களின் ஆரம்ப சம்பளம் ஆண்களின் ஆரம்ப சம்பளத்தைப் பார்க்கிலும் 14 வீதம் குறைவாகவே இருக்கின்றது. ஐந்து வருடங்கள் தொழில் செய்த பின்பு இந்த இடைவெளி 18 வீதமாக அதிகரிக்கின்றது.

 

ஆண்களுக்கு முதலாவது பதவி உயர்வு கிடைப்பதிலும் பார்க்க பெண்களுக்கு இரண்டு மாதம் தாமதித்தே முதலாவது பதவி உயர்வு கிடைக்கின்றது. ஆனால் ஆண்களை விட பெண்கள் தமது சம்பள எதிர்பார்ப்பு விடயத்தில் மிகவும் யதார்த்தமாகவே நடந்து கொள்கின்றனர் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. நியூஸ்ஓநியூஸ்.

 

4:34. சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்.