ஒசாமாவும் அமெரிக்காவும் - ஒரு வரலாற்றுப் பார்வை

08/05/2011 11:12

ஒசாமா பின் முஹம்மது பின் அவாத் பின் லேடன் என்பது ஒசாமாவின் இயற்பெயர். 54 வயதான ஒசாமா சவுதி அரேபியாவில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவின் ஆதரவில் அன்றைய சோவியத் ரஸ்யாவின் ஆப்கானிஸ்தான் மீதான ஆதிக்கத்தை முறியடிக்க ஒசாமா ஆப்பரேசன் சைக்லோன் 1979-1989 (Operation Cyclone) என்ற போருக்கு ஆப்கானிஸ்தான் முஜாஹிதீனகளுக்குத் தலைமையேற்று அதில் ரஸ்யாவின் மாபெரும் படையை முறியடித்தார் என்று சில வரலாற்று குறிப்புகள் தெறிவிக்கின்றன. அந்த போருக்குத் தேவையான பொருளாதாரம் மற்றும் ஆயுத உதவிகளை ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்களின் தலைவர்களுக்கு அமெரிக்கா வளங்கியது.

 

இதற்கிடையே மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 1982 ஜுன் ல் நடைபெற்ற லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு அமெரிக்கா உதவியதாலும், பாலஸ்தீன மக்களை கொன்று குவித்த இஸ்ரேலை ஆதரித்ததை எதிர்த்தும் அமெரிக்காவுக்கு எதிராக பின்லேடன் திரும்பியதாக தெறிகிறது. மேலும் 1991 வளைகுடா நாடுகளில் ஈராக் மற்றும் குவைத்துக்கு இடையான போரின் போது அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்ததால் 1991ல் சவுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின் சூடானில் குடியேரிய ஒசாமா 1996ல் அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டு மீண்டும் ஆப்கானிஸ்தானில் குடியேரினார்.

 

1992ல் ஏடன் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கும், 1998 ஜுன் 4ம் நாள் சவுதி அரேபியா ரியாத்தில் அமெரிக்கா நடத்திவந்த சவுதி நாட்டவர்களுக்கான பயிற்சி மையத்தில் கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது, ஒசாமாவின் அமெரிக்காவுக்கு எதிரான முதல் தாக்குதல் என குறிப்பிடப்பட்ட இந்தத் தாக்குதலுக்கும், 1998 ஆகஸ்ட் 7ல் கிழக்காசிய நாடுகளான தான்சானியாவின் தார் அஸ் ஸலாம் மற்றும் கென்யாவின் நைரோபி ஆகிய இடங்களில் அமெரிக்க தூதரகங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு வெடிப்புக்கும் ஒசாமாதான் காரணம் என்று அமெரிக்கா கூறிவந்தது. 1994ல் லபியா நாட்டில் 4 ஜெர்மானியர்களை கொன்ற வழக்கில் லிபியாவால் 1998 ல் முதன் முதலில் பின்லேடனுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக செய்திகள் தெறிவிக்கின்றன.

 

2001 செப்டம்பர் 11 ஆம் தேதிவரை உலகத்தில் பலருக்கும் ஒசாமா என்றால் யார்? அல்கொய்தா என்றால் என்ன வென்று தெறியாது. உலக வர்த்தக மையக்கட்டிடம் தகர்க்கப்பட்ட பிறகு அமெரிக்காவும் அதன் ஆதரவு ஊடகங்களும் ஒசாமா என்ற ஒரு நபரைத் தீவிரவாதியாக காட்டி செய்திகள் வெளியிட்டது அதை அனைத்துலக ஊடகங்களும் பட்டி தொட்டிக்கெல்லாம் கொண்டு சென்றது. செப்டம்பர் 11 தாக்குதலுக்கு ஒசாமாதான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்ட போதிலும் ஒசாமாவோ அல்லது அவரால் 1998ல் உருவாக்கப்பட்ட இயக்கம் என்று கருதப்படும் அல்கொய்தாவோ எந்த ஒரு மறுப்பும் தெறிவிக்கவில்லை அதே நேரத்தில் பொறுப்பேற்கவும் இல்லை. இந்த சம்பவமும் மீடியாக்கள் முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரிப்பதற்கு ஒரு காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவே நிலைகுழைந்து நின்ற போதிலும் அமெரிக்காவின் வரலாற்றில் அப்படி ஒரு நாளை அமெரிக்க அரசும் மக்களும் சந்தித்ததில்லை என்ற போதிலும் அதற்குப் பிறகு வந்த சில செய்திகளும், சில ஆய்வாலர்களின் கருத்துக்களும் அதற்கு ஆதரவாக அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த தாக்குதல் திட்டமிட்ட அமெரிக்காவின் சதி என அமெரிக்காவின் மீதே குற்றம் சாட்டியது. ஆனால் இன்றுவரை அந்தத் தகவல்கள் நிரூபிக்கப்படாமலேயே முடிந்துவிட்டது. இன்னும் சிலரின் கேள்வி இவ்வளவு பாதுகாப்பை மீறி அமெரிக்காவுக்குள்ளேயே தாக்குதல் நடந்தது எப்படி? என கேட்கத் துவங்கினர். மேலும் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி அமெரிக்க உளவுத்துறை கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஒரு சம்பவம் அறங்கேரியுள்ளது என்றால் அதை செய்தவர்களின் நேர்த்தியை ஆச்சர்யத்துடனும் சிலர் பதிவு செய்துள்ளனர்.

 

1996 முதல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதியை ஆட்சி செய்து வந்தனர். அதனால் செப் 11 தாக்குதலுக்கு அமெரிக்காவால் காரணமாகக் கருதப்பட்ட ஒசாமாவை அழிக்கப் போவதாக தீவிரவாதத்திற்கு எதிரான போர் (War on Terror) என களம் இறங்கி, ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த வடக்கு கூட்டணிப் படையின் ஆதரவில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் துவக்கி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறது. அப்பாவி பொதுமக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கொன்று குவிக்கத் தொடங்கிய அமெரிக்காவின் கோரதாண்டவம் இன்றளவும் முடிவுக்கு வரவில்லை.

 

அப்பாவி இளைஞர்களையும், சிறுவர்கள் மற்றும் வயதானவர்களைக் கூட சந்தேகத்தின் அடிப்படையில் விசாரானை என்ற பெயரில் கியூபா நாட்டில் உள்ள குவான்டனோமோ வளைகுடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறையில் வைத்து கொடுமைப்படுத்தி வருகிறது. இந்தத் தகவல் அவ்வப்போது வீடியோக்களாகவும் தற்போது விக்கீலீக்ஸ் மூலமும் உலகுக்கு தெறியவந்தது. இதற்கிடையில் ஆப்கானில் தாலிபான்கள் வீழ்த்தப்பட்ட பின்னர் ஒரு அமெரிக்க ஆதரவு அரசை அமைத்து இன்றளவும் அந்த அரசை அமெரிக்கா இயக்கி வருகிறது.

 

பல்வேறு முயற்சிக்குப் பிறகு கடந்த மே 2ம் நாள் அனைத்து செய்தி ஊடகங்களிலும் ஒசாமாவை அமெரிக்கா இராணுவம் பாகிஸ்தான் நாட்டின் அபோதாபாத் பகுதியில் ஒரு பாதுகாப்பான தனி வீட்டில் வைத்து கொன்றுவிட்டதாக செய்திகள் வெளியிட்டன. மீண்டும் ஒசாமா பற்றிய தகவல் உலகின் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு செல்லப்பட்டது.

 

இதற்கிடையில் ஒசாமா பற்றி பல்வேறு செய்தி ஊடகங்களும் தம் பத்திரிக்கை வியாபாரத்திற்காக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டது. பல கட்டுரையாளர்கள் கட்டுரைக்கு சுவைசேர்க்கும் வண்ணம் ஒசாமாவுடன் போர்களத்தில் களந்து கொண்டவர்களைப் போலும், இன்னும் சிலர் ஒசாமா என்ற ஒரு ஆளே இல்லை என்றும், அல்கொய்தா என்ற அமைப்பை அமெரிக்காவே உருவாக்கி அந்தப் பேரை ஒசாமாவுடன் சம்மந்தப் படுத்துவதாகவும் எழுதத் துவங்கினர்.

 

இறுதியில் ஒசாமா அமெரிக்காவால் கொள்ளப்பட்டதாக வந்த செயதிகளில் பல்வேறு குளறுபடிகள், புகைப்படம் போலி, ஒசாமா கொள்ளப்பட வில்லை மற்றும் ஒசாமா முன்பே இறந்துவிட்டார் அல்லது கொள்ளப்பட்டுவிட்டார் என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. பல புறங்களில் இருந்து வந்த நெருக்கடிகளைத் தொடர்ந்து அமெரிக்கா சில சம்மந்தமே இல்லாத வீடியோக்களை வெளியிட்டுவிட்டு அதை ஒசாமா கொள்ளப்பட்டதற்கு ஆதாரமாக்க முயல்கிறது. இன்னும் ஒரு படி மேலே சென்று அல்கொய்தா தலைவர்கள் தான் ஒசாமாவை காட்டிக் கொடுத்தார்கள் என்றும், பாகிஸ்தான் அடைக்களம் அளித்து வந்ததாகவும் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

 

இதற்கிடையே கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஒசாமாவின் உடலை கடலில் இஸ்லாமிய முறைப்படி புதை்ததாக புருடா விட்டு வருகிறது அமெரிக்கா. என்னதான் கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், மக்களால் உடலை கடலில் அமெரிக்க ராணுவம் வீசி எறிந்துவிட்டதாகவே கருதுதப்படுகிறது. இந்த செயலை மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் கண்டித்துள்ளனர். குறைந்தபட்சம் அவர்களின் உறவினர்களிடமாவது கொடுத்திருக்க வேண்டும் என கருத்து தெறிவித்துள்ளனர்.

 

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையிலும் புதிய சந்தேகம் எழுந்துள்ளது. தமது ஆதிக்கப் போக்கின் உச்சகட்டமாக போர் நடவடிக்கைகளின் போது பின்பற்ற வேண்டிய எந்த மரபுகளையும் அமெரிக்கா பின்பற்றாது என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் நிராயுதபானியை சுட்டுக் கொள்வது, உடலை சிதைப்பது போன்றவைகள் எல்லாம் போர்குற்ற நடவடிக்கைகளாக கருதப்படும். அது போன்று ஏதாவது நடந்திருக்குமோ என நினைக்கத் தோன்றுகிறது அமெரிக்காவின் அந்த கோரமுகம் உலகிற்கு தெறிந்துவிடும் என்று கருதியோ என்னவோ அமெரிக்கா ஆதாரங்களை வெளியிட மறுக்கிறது. சிலகாலம் தாமதிப்போம் விக்கீலீக்ஸ் மூலமோ அல்லது வேறெரு பிக்கீலீக்ஸ் மூலமே உலகம் அந்த முகத்தை அறிந்துகொள்ளும்.

 

இறுதியாக ஒசாமா என்ற ஒருவரைப்பற்றிய சர்ச்சைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது மட்டுமே நடந்து முடிந்துள்ள அமெரிக்காவின் நாடகத்தின் (Operation Neptune Spear" with "Geronimo”) கிளைமேக்ஸ்.

 

அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முடிவே இல்லையா?

கடந்த காலங்களில் உலகில் மிகப்பெரிய பேரரசாகத் திகழ்ந்த ரோமானியப் பேரரசு, பாரசீகப் பேரரசு, பிரிட்டிஸ் பேரரசு மற்றும் ரஸ்யா ஆகிய பலம் பெரும் பேரரசுகளும் வல்லரசுகளும் இன்று எங்கே என்றே தெறியவில்லை அது போல் இன்று அமெரிக்கா. நாளை?

 

புஹாரி 6501. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'அள்பா' என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவராலும் வெல்ல முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக இருந்தது. (ஒரு பயணத்தின் போது) கிராமவாசி ஒருவர் தம் (ஆறு வயதுக்குட்பட்ட) வாட்டசாட்டமான ஒட்டகத்தின் மீது வந்து நபிகளாரின் அந்த ஒட்டகத்தை முந்திச் சென்றார். இது முஸ்லிம்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. முஸ்லிம்கள் 'அள்பா பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது' என்று கூறினர். (இதை அறிந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உலகில் உயர்ந்துவிடுகிற எந்தப் பொருளாயினும் நிச்சயமாக (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டுவருவதே அல்லாஹ்வின் நியதியாகும்' என்று கூறினார்கள்.
 

 

وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ

 

காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம் (அல்குர்ஆன் 3:140)

 

ஒருநாள் அமெரிக்காவும் கீழே கொண்டுவரப்படும் என்பதே நியதி.