கிட்னி செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள சகோ.இக்பால் அவர்களுக்கு உதவிடுவீர்

05/02/2010 13:25

 

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

உதவிடுவீர் 

இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிராமத்தைச் சேர்ந்த சகோதரர் முஹம்மது இக்பால் அவர்கள் இரண்டு கிட்னிகளும் பழுதடைந்த நிலையில் தற்காலிகமாக வாரம் இருமுறை இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் உடலில் செழுத்தி வாழ்ந்து வருகிறார்கள். இதற்க்கு மாதம் ரூபாய் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை செலவாகி வருகிறது.

 மருத்துவர்களின் ஆலோசனைப் படி இப்படி இரத்தம் சுத்திகரிக்கப் பட்டு செழுத்தும் முறை தவிர அவருக்கு வேறு கிட்னி மாற்றி அறுவைசிகிச்சை செய்தால் நிறந்தரமாக குணமாக்கிவிடலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

 சகோதரர் இக்பால் நம்மைப் போன்ற கீழ் நடுத்தர நிலையைச் சார்ந்தவர். இவருக்கு இரண்டு திருமணமாகாத பெண் பிள்ளைகளும் பள்ளிக்கு செல்லும் ஒரு ஆண் பிள்ளையும் இருக்கிறார்கள். தம்மால் உழைக்கவும் முடியாமல், குடும்பத்தை காப்பாற்றுவும் முடியாமல் இருக்கும் இவருக்கு இரத்தம் சுத்திகரிப்புக்கோ, கிட்னி மாற்று அறுவைசிகிச்சைக்கோ போதுமான பொருளாதாரம் இல்லாத நிலையில் தவித்து வருகிறார்.

 கிட்னி மாற்று அறுவைசிகிச்சைக்கு சொந்தத்தில் யாரும் கிட்னி தானம் செய்தால் அறுவைசிகிச்சை செலவு மட்டும் சுமார் 3.5 லட்சம் ஆகும். அதற்க்கு முன்பும் பின்பும் சுமார் 10 மாதகாலம் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை தேவைப்படும் இதன் செலவுகள் தனி. மூன்றாம் நபர் யாரும் கிட்னி தானம் செய்தால் அவருக்கு கேட்கும் பணம் கொடுக்க வேண்டும் அது தற்ப்போது 1.5 லட்சத்திலிருந்து 3 லட்சம் வரை ஆகும் என தெறிகிறது. இப்படி செலவீனங்களின் நிலை மிக அதிகமாக இருப்பதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 கடந்த காலங்களில் கிட்னி தானத்தில் தமிழகத்தில் நடந்த மோசடிகளைத் தொடர்ந்து அரசு அதன் விதிமுறைகளை மிகவும் கடுமையானதாக்கி இருக்கிறது. இது இத்துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. எது எப்படியோ போதுமான பொருளாதாரம் இருந்தால் குறைந்தபட்சம் இரத்தம் சுத்திகரிப்பு முறையிலாவது சிலகாலம் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கமுடியும்.

 கிட்னி மாற்று அறுவைசிகிச்சைக்கு செலவு என்று பார்த்தால் சுமார் 10 இலட்சங்கள் தேவை (அனைத்து செலவுகளும் உட்பட).

 எவ்வலவோ செலவுகளுக்கு மத்தியில் உங்களுடைய உதவிகள் இந்த உயிரை காப்பாற்ற தேவைப்படுகிறது. உங்களால் இயன்ற உதவியையும், உங்களுடைய நண்பர்கள், உங்களுடன் வேலை செய்யும் நண்பர்கள், உங்களுக்கு தெறிந்த தொழில்முனைவோரிடம் இந்த சகோதரர் இக்பால் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு பணஉதவிகள் பெற்றுத் தருமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 இச் சகோதரர் சிகிச்சை சம்மந்தமான ஆவணங்கள் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.

 உங்களது உதவிகளை மார்ச் 15, 2010ம் தேதிக்குள் எமக்கோ, இயக்கங்கள் மூலமாகவோ, உள்ளுர் அமைப்புகள் மூலமாகவோ அல்லது சம்மந்தப்பட்ட சகோதரருக்கு நேரடியாகவோ அனுப்பித் தருமாறு அன்புடன் கோட்டுக் கொள்கிறேன்.

 

  Account Details

A/C Name: Mohamedu Iqbal

A/C No:      617001500382

Bank:         ICICI Bank,

Branch:      Panaikulam,

District:      Ramanathapuram

இப்படிக்கு

அப்துல் ஹலீம்

புதுவலசை ஜமாஅத் வெப்

 

சகோதரர் இக்பால்

தெலைபேசி எண்

0091-9790064405

 

 In the Name of God

 

Assalamu Alaikkum

 

Mr. Muhamed Iqbal, Puduvalasai village, Ramanathapuram District, Tamilnadu, India. He is suffering from Kidney failiour. He needs to dialysis twice a week or he needs kidney translation to save his life.

 

Nowadays kidney related treatments are very expensive. Mr. Iqbal is a lover middle class man; it is very difficult to bear the cost of his treatments. He has two female unmarried girls and a school going boy. He could not able to earn and save his family also.

 

Kidney dialysis twice a week will cost around 10 – 15 thousands per month. Kidney transplation operation cost around 3.5 lacks. And he needs to continue treatment around 10 months, cost extra.

 

If there is a won downer from his family circle or his friends circle that will be good. But third party downer, the claims must be satisfied by the compensation that will cost around 1.5 – 3 lacks nowadays.

 

The total Cost of the Kidney Transplation around 10 lacks.

 

So please help this victim to save his own life as well as his family.

I enclosed the related Documents herewith.

 

Do the needful and covey to your friends, Colleagues and Entrepreneurs, collect the fund and send to me or to him directly.

 

Please send you contributions before March 15, 2010.

 

Thanking you,

Abdul Haleem

Puduvalasai Jamath Web.