செய்தித்துளிகள் அக். 2010

31/10/2010 15:33

 

  •  தமிழக வணிகவரித்துறை அமைச்சர் உபாயத்துல்லா மகன் சாந்தி உசேன் (40) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

    ஊட்டியில் பலத்த மழை பெய்தபோது தொட்டபெட்டா சிகரத்தை மின்னல் தாக்கியது. இதில் அந்த கட்டிடம் சேதம் அடைந்தது. தமிழகத்தின் பல்வேறுஇடங்களில் மின்னல் தாக்கி 3 பெண்கள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர்

     

    ஆப்கன் போர் தொடர்பான மீதம் உள்ள ஆவணங்களை வெளியிட வேண்டாம் என்றும், அவற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் விக்கிலீக்ஸ் நிர்வாகத்திடம் அமெரிக்க பாதுகாப்புத்துறை பகிரங்கமாக கேட்டுக்கொண்டது. ஆனாலும், அந்த ஆவணங்களை வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது.

    "ராஜீவ்காந்தி சிலை அவமதிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை" என்று கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சோனியா காந்திக்கு ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொல்.திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.    

     

    இராக் போர் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் பால் அசான்ஜ் (39), தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே, ஆள்மாறாட்டத்தில் ஊர் ஊராகச் சுற்றி வருகிறார்.

     

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை'' எ‌ன்று பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் தெரிவித்து‌ள்ளா‌ர்.

     

    32 மீனவர்கள், 6 விசைப்படகுகளில் கடந்த ஜூலை மாத்தில் சவுதி கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கத்தார் நாட்டு கடல் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்து மீன் பிடித்த காரணத்துக்காக தமிழக மீனவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் இரண்டாண்டு கால சிறைத்தண்டனையை விதித்துள்ளது.  

    குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும் இந்த முறை சிறுபான்மையினரும் பெருமளவில் பாஜகவுக்கு வாக்களித்து இருப்பதாகவும் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

     

    தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீதிபதி கோவிந்தராஜன் திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.

     

    கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசின் இணையதளமான www.tn.gov.in என்ற முகவரியில் காணலாம்.

     

    வெளிநாடுகளில் போய் கருப்புப் பணத்தை குவிக்கும் செயலைத் தடுக்க, நாட்டின் வரிவிதிப்பு முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி

  • ஒசாமா பின்லேடன்  பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பாதுகாப்புடன் பாகிஸ்தானின் வட கிழக்குப் பகுதியில் வசிப்பதாக ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படையின் மூத்த ராணுவ தலைவரை மேற்கோள் காட்டி அமெரிக்காவிலிருந்து வெளியாகும் சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

  • ஒசாமா பின்லேடன் பதுங்கியிருக்கும் இடம் குறித்து அமெரிக்காவிடம் எந்தத் தகவலும் இல்லை என்று அந்த நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

  • பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விவரத்தை அரசின் இணையதளத்தில் உடனடியாக வெளியிடாவிட்டால் அரசை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என்று அரசுக்கு வக்கீல் நோட்டீஸ், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அனுப்பியுள்ளார்.

  • சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை, பணத்தைப் பறித்த சட்டப்பேரவை முன்னாள்  உறுப்பினர் ரவிசங்கர் பொது மக்களிடம் சிக்கினார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

  • புதுதில்லி, அக். 20: காமன்வெல்த் ஊழலில் என்னை அரசியல் பலிகடாவாக ஆக்கிவிட்டார்கள் என தொழிலதிபரும் பாஜக பிரமுகருமான சுதன்ஷு மிட்டல் குற்றம்சாட்டியிருக்கிறார். தன்மீதான ஊழல் புகார்களையும அவர் மறுத்திருக்கிறார். காமன்வெல்த் விளையாட்டு திட்டங்களில் 8 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கண்டறிந்துள்ளது.

  • உணவுக்கு உத்தரவாதச் சட்டம் விரைவில் அமலாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஊட்டியில் ஒரு பொதுக்கூட்டத்தில் கூறினார்.
  • மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று‌ம் மருத்துவமனைகளில் போதிய கவனிப்பு இன்றி மரணம் நிகழும் செய்திகள் அறவே வராத அளவுக்கு பணியாற்ற வேண்டும் என்றும் முதலமை‌ச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
  • கர்நாடக மாநில ஆளுநர் பரத்வாஜை மாற்றவேண்டும் என்ற பாரதீய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
  • நீதிபதியாக பணியாற்ற வேண்டுமானால், கம்ப்யூட்டர் குறித்த அடிப்படை அறிவை அவசியம் தெரிந்திருக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
  • காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழா நிகழ்ச்சி நாளை 14-10-10 நடைபெறுவதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட சீனாவில் மனநோயாளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. ஷாங்காய் மாகாணத்தில் எட்டு பேரில் ஒருவர் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். 75 சதவீத மக்கள் இந்த நோயால் சிகிச்சை எடுத்துவருகின்றனர்.
  • சிலி நாட்டில் சுரங்க விபத்தில் சிக்கியவர்களில் முதல் நபர் பத்திரமாக மீட்கப்பட்டார். சரியாக 68 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு பிளாரன்சோ அவலாஸ் (31) என்பவர் முதல் நபராக பத்திரமாக மீட்கப்பட்டார். அவரை தொடர்ந்து மேலும் 4 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
  • அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தின் பேராசிரியர் பீட்டர் ஏ டைமண்ட் (70), வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேல் டி மார்டன்சென் (71), பிரிட்டனில் உள்ள "லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' மையத்தின் பேராசிரியர் கிறிஸ்டோபர் ஏ பிஸிரைட்ஸ் (62) ஆகிய 3 பேரும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழக மாணவர் காங்கிரஸ் கூண்டோடு இன்று கலைக்கப்படுகிறது. ராகுல் நேரடி பார்வையில் நடைபெறவுள்ள மாணவ காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் அட்டவணையின் அறிவிப்பை மேலிட தலைவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுகின்றனர்.
  • நாடு முழுவதும் பா.ஜ., வினருக்கு மூன்று நாட்கள் அரசியல் பயிற்சி முகாம் நடக்க உள்ளது. பா.ஜ, தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன்.
  • அலாகாபாதஉயரநீதிமன்றததீர்ப்பினமூலமஅயோத்தியிலஇராமரபிறந்இடமஉறுதி செய்யப்பட்டிருப்பதாலஅங்கு இராமருக்கபிரமாண்கோயிலகட்டப்படுமஎன்றவிசுஇந்தபரிஷத் பொதுசசெயலரபிரவீணதொகாடியதெரிவித்தார்.
  • சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ராமர் கோவிலை அகற்றக் கூடாது என, கோர்ட் உத்தரவிட்டதும் பக்தர்களின் வருகை அதிகரிப்பு. அப்படி வரும் பக்தர்கள் ராமர் கோவில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர், கோவில் அருகேயுள்ள தங்களின் பணிமனையில் செதுக்கி வரும் கற்களையும் பார்த்து செல்கின்றனர். சில நாட்களாக மூடப்பட்டிருந்த இந்த பணிமனை, தீர்ப்பிற்கு பின் திறக்கப்பட்டுள்ளது.
  • அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான சி.யு.கான், தனது தீர்ப்பில் தெரிவித்த மேலும் சில விஷயங்கள் வெளியாகியுள்ளன. அதில் அவர், "கடந்த 1986ல் சர்ச்சைக்குரிய இடத்தில் பூட்டை திறப்பதற்கு பைசாபாத் மாவட்ட கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது. பிரச்னை பெரிதானதற்கு இந்த அனுமதி தான் முக்கிய காரணமாக இருந்தது' என, தெரிவித்துள்ளார்.
  • அவை‌யி‌ல் முதலமை‌ச்ச‌ர் உம‌ர் அ‌ப்து‌ல்லா உரை ‌நிக‌ழ்‌த் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌‌வி‌த்து  அவை‌ததலைவ‌ரதா‌க்முய‌ன்ா.ஜ.க உறு‌ப்‌பின‌ர்களை அவை‌ககாவல‌‌ர்க‌ளதடு‌த்து ‌நிறு‌த்‌தின‌ர்.
  • இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட்டு சமரச முயற்சிகளில் ஐ.நா.ஈடுபடத் தயாராக உள்ளது என்று அதன் பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
  • ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சுற்றுச் சூழல் மற்றும் தொற்றுநோய் பரவல் பிரிவு பேராசிரியரான ஜோயல் ஷ்வார்ட்ஸ், பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் தாக்குதலால் உயரிழப்பவர்களின் எண்ணிக்கையை விட, அன்றாடம் எதிர்கொள்ளும் சாலை விபத்து மற்றும் புற்று நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறியுள்ளார்.
  • அயோத்தி வழக்கில் சமரசப் பேச்சுக்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் சம்பந்தப்பட்ட முதியவர் முகமது ஹசீம் அன்சாரிக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட வேண்டும் என்று ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • நிலத்தை மூன்றாக பிரித்து கொடுத்தது தவறானது.  எங்களுக்கு ஒதுக்கி இருக்கிற 3500 sq.ft கர்ப்ப கிரகம் கட்டுவதற்கே பயன்படாது.  ஆகையால், கோயில் கட்டுவதற்காக, அரசு கையகப்படுத்தி இருக்கிற 67 ஏக்கர் நிலத்தையும் எங்களுக்கே தரவேண்டும் - VHP தலைவர் அசோக் சிங்கால்
  • தமிழகத்தில் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய வெளிச் சந்தையிலிருந்து 600 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • சீனாவின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனம், தமிழகத்தில் தனது நிறுவனத்தைத் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
  • தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.  பெற்றோர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மீது 4 மாதங்களுக்குள் முடிவு எடுக்குமாறு நீதிபதி கோவிந்தராஜன் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இரஷ்யா உருவாக்கிவரும் 5வது் தலைமுறை அதி நவீன சண்டை விமானங்கள் (Fifth Generation Fighter Aircraft – FGFA) 250ஐ, 2,500 கோடி டாலர் செலவழித்து இந்தியா வாங்கவுள்ளது.