பிறந்தநாள் கொண்டாட்டம் இஸ்லாத்துக்கு எதிரானது - தாருல் உலூம் மதரஸா பத்வா

08/11/2011 22:16

வட இந்திய முஸ்லீம்களின் முக்கிய மத கல்வி நிறுவனமான தியோபந்தில் உள்ள தாருல் உலூம் மதரஸா பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவை என்றும் அவை மேற்கத்திய நாடுகளின் கலாசாரம் என்றும் குற்றம் சாட்டி உள்ளது.

அலிகார் முஸ்லீம் பல்கலைகழகத்தின் நிறுவனர் சர் சையது அஹ்மது கானுக்கு பிறந்த நாள் கொண்டாடுதல் சம்பந்தமாக ஒரு மாணவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது இப்பத்வா வழங்கப்பட்டது.

மேலும் தாருல் உலூமின் துணை வேந்தர் மெளலானா அபுல் காசின் நுமானி கூறும் போது ஷரியத்துக்கு மாற்றமான பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்றவை மேற்குலக கலாச்சார பாதிப்பு என்றும் தாருல் உலூமின் சார்பாக முஹம்மது நபி அவர்களின் பிறந்த நாளையே கொண்டாடுவதில்லை என்றும் கூறினார்.

https://www.inneram.com/2011110720025/birthday-bashes-against-sharia-darul-uloom