பொழுதுபோக்கிற்காக இணையத்தை பயன்படுத்துபவர்களே அதிகம்: ஆய்வில் தகவல்

08/12/2011 23:18

 

 
அமெரிக்காவில் யார் யார் எதற்காக இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக பியூ ஆய்வு மையம் பொதுமக்களிடம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.

கடந்த ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 2,250-க்கும் அதிகமானவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களிடம் தகவல் பெறப்பட்டது.

இதில் தெரியவந்த தகவல்கள் பின்வருமாறு: 18-29 வயதினரில் 53 சதவீதம் பேர் எந்த வேலையும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக தான் இணையத்தை பார்க்கின்றனர்.

50-64 வயதினரில் 27 சதவீதம் பேரும், அதைவிட வயது அதிகமானவர்களில் 12 சதவீதம் பேரும் இந்த ரகத்தை சேர்ந்தவர்கள்.

மொத்தத்தில் முக்கால்வாசி பேர் எதற்கும் பயனின்றி பொழுதுபோக்கிற்காக தான் இணையத்தை பார்க்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

 

https://newsonews.com/view.php?24oAld0baEq0Qd423AMe322cBnZ2edeZBL5c03eCAA2edCQ8qac02dOI42