லோக்பால் மசோதா என்பது என்ன?

27/06/2011 10:34

கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஊழலுக்கு எதிரான போராட்டம் முழுவீச்சில் சிலரால் முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பலர் தம் சுய இலாபங்களுக்காகவும், விளம்பரங்களுக்காகவும் செயல்பட்டுவருவது கண்கூடு. இதில் தொடர்ந்து ஒரு பெயர் அடிபட்டு வருகிறது அதுதான் லோக்பால் மசோதா.

 

லோக்பால் மசோதா என்றால் என்ன?

கடந்த 1960களுக்கு முன் சில நாடுகள் ஒரு நிர்வாக முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அந்த முறை பொதுமக்களை ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்கிறது. இந்தியாவில் 1966ல் அமைக்கபட்டட நிர்வாக மறுசீறமைப்புக் குழு (The Administrative Reforms Commission (ARC)) அரசுக்கு இரண்டு பரிந்துரைகளை வழங்கியது அதுதான் 1. லோக்பால் (மத்திய அரசுக்கும்) 2. லோக் யுக்தா (மாநில அரசுக்கு). இந்த சட்டத்தை இந்திய நாடாளுமன்றத்தில் சட்டமாக்க கடந்த 1971 முதல் 2008 வரை 8 முறை முயற்சி செய்யப்பட்டு நிறைவேற்றப்படாமல் போய்விட்டது.

 

இந்தியாவில் நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியன சுதந்திரமான அமைப்புக்களாகும். இந்த இரண்டு துறைகளிலும் அரசு தலையிட முடியாதவண்ணம் அரசியல் சாசனம் அமைக்கப்பட்டுள்ளது. அது போல் ஊழலுக்கு எதிராக ஒரு அமைப்பு தேவை என்ற வாதத்தின் பெயர்தான் இந்த லோக்பால் மசோதா. இந்த லோக்பால் மசோதாவில் பொதுமக்கள் இடம்பெருவார்கள் அவர்களே சம்மந்தப்பட்ட அதிகாரியை விசாரிக்கவும், அரசியல்வாதிகளை விசாரிக்கவும் அதிகாரம் பெற்றவர்களாக ஆவார்கள். ஆனால் இதில் சில மாற்றங்களை செய்து பொது மக்களும் அரசும் இடம்பெரும் வகையில் தற்பொது லோக்பால் மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நீதிமன்றங்களையும், பிரதமரையும் இந்த வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என லோக்பால் மசோதாவை ஆதரிக்கும் அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பு வழியுறுத்தி வருகிறது.

 

இந்த மசோதாவின் மூலம் ஊழல்வாதிகளை பாரபட்சமின்றி தண்டிக்கமுடியும் என சிலர் வாதிடுகின்றனர் சிலர் இது தோவையற்றது, இந்தியாவில் போதுமான சட்டம் இருக்கும் போது இது ஒன்றும் புதிதாக செய்துவிடப்போவதில்லை என சிலர் மறுத்தும் வருகின்றனர். அதே நேரத்தில் யாரேனும் தவறாக ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தது தெறியவந்தாலோ அல்லது குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் போய்விட்டாலே குற்றம் சாட்டியவர் மீது லோக்பால் நடவடிக்கை எடுக்கும் அதாவது அபதாரமோ அல்லது சிறை தண்டனையோ வழங்கப்படும் என்ற அந்த மசோதாவின் சாராம்சம் ஊழலை தடுக்க உதவியாக இல்லை.

 

தற்போது இது புதிய யுக்தியாக மாறிவருகிறது யாரெல்லாம் ஊழலுக்கு எதிராக குரல்கொடுக்கிறார்களோ அவர்களெல்லாம் பிரபளமாகி வருகின்றனர். தமிழகத்தை தமிழர் என்ற சொல் பல தலைவர்களை உருவாக்கியுள்ளது போல் இன்று அகில இந்திய அளவில் ஊழலை எதிர்க்கிரோம் என்று பலர் கிளம்பியுள்ளனர். ஊழல் ஒழிக்கப்ட்டால் அது கண்டிப்பாக நம் நாட்டு வளர்ச்சிக்கு உதவும். ஊழலை எதிர்பதிலும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பவர்களுமே ஊழல் வாதிகாளக இருக்கும் நிலையில் அடி முதல் முனிவரைக்கும் இமயமலையை மிஞ்சும் அளவுக்கு வளர்ந்து நிற்கிற இந்த ஊழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் நம் ஆட்சியாளர்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

அபு அஸ்பா, புதுவலசை.இன்

29-06-2011