சமுதாயச் செய்தி

விக்கிபிடியாவில் யூதர்கள் பொய் பிராச்சாரம் பதிலடிக்கு பாலஸ்தீனர்கள் தயார்!

01/09/2010 09:05
பாலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய யூதர்கள், தங்கள் ஆக்கிரமிப்பை நியாப்படுத்தும் விதமாக புகழ்பெற்ற இணையதளமான விக்கிபீடியாவில் தவறான வரலாற்று குறிப்புகளை பதிவு செய்து வருகிறார்கள் என்று பாலஸ்தீன இதழியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இப்பணிக்காக இஸ்ரேலிய யூதர்கள் ஒரு சிறப்பு குழுமத்தை அமைத்து அதன்...

எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை - லாலு, முலாயம்

31/08/2010 10:03
எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வர எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் சமாஜவாதி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் திங்கள்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு சென்று விட்டவர்களின் சொத்துகளை நிர்வாகம் செய்வது தொடர்பாக 1968-ல் சட்டம் கொண்டு...

சிறுபான்மையினருக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் வேலூர் முதலிடம்

31/08/2010 09:51
மாநிலத்தில் சிறுபான்மையினருக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளதாக, மாநில சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் சேவியர் அருள்ராஜ் கூறினார். திண்டுக்கலில் சிறுபான்மையினருக்காக அரசு திட்டங்களை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது....

சிறுபான்மை பள்ளிகளுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மை பள்ளிகள் கூட்டமைப்பு

31/08/2010 09:42
சிறுபான்மை பள்ளிகளுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மை பள்ளிகள் கூட்டமைப்பு புதிதாக துவக்கப்படுகிறது. இதன் துவக்க விழா மற்றும் மாநில அளவிலான கருத்தரங்கம் வரும் 2ம் தேதி சென்னையில் நடக்கிறது. தமிழ்நாடு சிறுபான்மை பள்ளிகள் கூட்டமைப்பின் பொருளாளர் கிஷோர் குமார் கூறியதாவது: தமிழகத்தில் முதன்...

கொல்கத்தாவில் ரூ. 15 கோடியில் 10 ஆயிரம் பேர் தங்கக்கூடிய ஹஜ் டவர்

31/08/2010 09:37
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்காக முதல்வர் கருணாநிதிக்கு, மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில்  ரூ. 15 கோடியில் 10 ஆயிரம் பேர் தங்கக்கூடிய ஹஜ் டவர் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில்...

முதல்வருக்கு இஸ்லாமியர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்

31/08/2010 09:28
  "சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக முதல்வர் கருணாநிதி விளங்குகிறார்,'' என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழ் மாநில தேசிய லீக் சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 1969ம் ஆண்டு தி.மு.க.,...

பிகாரில் முஸ்லிமுக்கு துணை முதல்வர் பதவி தர தயார் - ராம்விலாஸ் பாஸ்வான்

30/08/2010 10:20
பிகாரில் அடுத்த தேர்தலில் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி கூட்டணி வெற்றிபெற்றால் துணை முதல்வர் பதவியை முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு கொடுப்பது பற்றி பரிசீலிப்போம்  என லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்தார்.  பாஸ்வான், தனது சகோதரர் ...

இந்திய அரசியலில் மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது அயோத்தி பிரச்னை

30/08/2010 10:14
பாபர் மசூதி விவகாரம் இந்திய அரசியலில் மீண்டும் முக்கியத்துவம் பெற உள்ளது. சர்ச்சைக்குரிய இடம் இந்துகளுக்குச் சொந்தமா அல்லது முஸ்லிம்களுக்குச் சொந்தமா என்பது குறித்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் விரைவில் தீர்ப்புக் கூற உள்ளது. தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருந்தாலும் அது அரசியல் ரீதியில் பெரிய...

அயோத்தி விவகாரம்: கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காண முயற்சி எடுங்கள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜாவீத் ஹபீப் கோரிக்கை

29/08/2010 10:29
அகில இந்திய பாபர் மசூதி நடவடிக்கை குழு தலைவர் ஜாவீத் ஹபீப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், ``இந்து, முஸ்லிம்கள் நன்மை கருதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டவும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதி கட்டவும், கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காண நடவடிக்கை...

முஸ்லீம்களுக்கு 12% இடஒதுக்கீடு: சந்திரசேகர ராவ் வாக்குறுதி

28/08/2010 22:06
தெலங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட்டால், முஸ்லீம்களுக்கு 12% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் வாக்குறுதியளித்துள்ளார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அவர் இத்தகவலை வெளியிட்டார். மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்ட மாநிலமாக...
<< 11 | 12 | 13 | 14 | 15 >>