ஈரானிடம் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள்: யு.எஸ். அச்சம்

30/11/2010 16:06

இந்தியா சம்பந்தப்பட்ட தம்மிடம் உள்ள ரகசிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்" முழுமையாக வெளியிட்டால், இரு நாடுகளிடையேயான உறவு கடுமையாக பாதிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அமெரிக்க அயலுறவுத் துறை செய்தி தொடர்பாளர் பி.ஜே.குரோலி, மேலும் கூறியதாவது:

இந்தியா சம்பந்தப்பட்ட ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிடக்கூடும் என்பது குறித்து
இந்தியாவுடன் பலமுறை பேசியுள்ளோம். இந்தியாவைப் போல பல்வேறு நாடுகளுடனும் பேசியுள்ளோம்.வரும் நாட்களில் இதுகுறித்து தொடர்ந்து பேசுவோம்.

லட்சக்கணக்கான அமெரிக்க ஆவணங்களை "விக்கிலீக்ஸ்" வெளியிட்டு வருவதை முன்னிட்டு, வெளியிடப்படாமல் உள்ள ஆவணங்கள் குறித்து இந்தியாவிடம் அமெரிக்க அயலுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விக்கிலீக்ஸிடம் எத்தகைய ஆவணங்கள் உள்ளன என்பதும், அது எந்தமாதிரியான திட்டங்கள் வைத்துள்ளது என்பதும் தெரியவில்லை. எங்களது நிலையை தெளிவுபடுத்திவிட்டோம். அந்த ஆவணங்கள் கண்டிப்பாக வெளியிடப்படக்கூடாது என குரோலி தெரிவித்தார்.

2, 50,000 ஆவணங்களில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் 3000 ஆவணங்கள் விக்கிலீக்ஸிடம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அவைகளை "விக்கிலீக்ஸ்" இதுவரை வெளியிடவில்லை. இத்தகைய ரகசிய ஆவணங்கள் வெளியானால் இரு நாடுகளிடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

webdunia.com