சமச்சீர் கல்வி சாதக பாதகங்கள் என்ன?

23/06/2011 12:34

கடந்த சில நாட்களாகவே சமச்சீர் கல்வி குறித்த பல்வேறு வாத பிரதி வாதங்கள் ஒவ்வொறு நாளும் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் வந்த வண்ணம் உள்ளது. அதுவும் ஜெ முதல்வராக பதவியேற்ற உடன் அது சற்று சூடு பிடித்துள்ளது என்றே சொல்லலாம். சமச்சீர் கல்வி ரத்து, பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் மற்றும் பளைய பாடத்திட்டத்தையே அமல் படுத்த அரசு எடுத்த முயற்சி அதற்காக இணையதளத்தில் பாடப்புத்தக வெளியீடு கடைசியாக உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை இவ்வாண்டு 6ம் வகுப்புவரை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

 

சமச்சீர் கல்வி ஏன்?

சமச்சீர் கல்விமுறை நடைமுறைப்படுத்து கடந்த திமுக அரசு சில காரணங்களை கூறியது. அதில் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்களான மெட்ரிக் (Metriculation Syllabus), ஆங்கிலோ இந்தியன் (Anglo Indian Syllabus), ஓரியன்டல் (Oriental Syllabus) மற்றும் மாநில அரசுப் பாடத்திட்டம் (State Board Syllabus) என்று 4 வாரியங்களும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன அந்த வாரியங்களின் பாடத்திட்டங்களில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. ஆகையால் அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து அதில் சிறந்த பாடத்தை மட்டும் எடுத்து புதிய சமச்சீர் பாடத்திட்டம் என்று உருவாக்கி நடைமுறைப்படுத்தவது எனற முடிவை தெறிவித்தது.

 

1. இதனால் பல்வேறு பள்ளிகள் தமது தரத்தை மெட்ரிக் என்றோ ஆங்கிலோ இந்தியன் அல்லது ஓரியன்டல் என்று கூறியோ அதிக கட்டணங்களை வசூளிப்பதில் இருந்து தடுக்கப்படும்.

 

2. அனைத்து மாநில அரசுப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு முறை மற்றும் ஒரே விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும். இதனால் எல்லா மாணவர்களுக்கும் சிறந்த ஒரேமாதிரியான கல்வி கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

 

சமச்சீர் கல்வி முறையால் ஏற்படும் மற்றும் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்ன?

1. சமச்சீர் கல்வி முறை என்று வந்தால் தனியார் பள்ளிகள் தங்களின் தரத்தை உயர்த்துவாதாகக் கூறி மத்தி அரசுப் பாடத்திட்டத்திற்கு (CBSE Syllabus - Centre Board of School Eductaion) மாறும் வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் கட்டணப் பிரச்சனை ஏற்படும்.

 

2. சமச்சீர் கல்வி முறை என்று கூறி தரமான மெட்ரிக், ஓரியன்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டங்களை மாநில அரசுப் பாடத்திட்டதிற்கு ஒப்ப மாற்றும் போது அதன் கல்வித் தரம் குறையும் என சில கல்வியாளர்கள் கருத்துத் தெறிவிக்கின்றனர். அவர்களின் கருத்து என்னவென்றால் மற்ற கல்வி முறைக்கு ஏற்ப மாநில அரசுப் பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு சமச்சீர் கல்வி என்ற பெயரில் நல்ல பாடத்திட்டத்தின் தரத்தை குறைப்பதா என கேள்வி எழுப்புகின்றனர். அது மட்டுமில்லாமல் மற்ற மாநில மாணவர்களுடன் தமிழக மாணவர்கள் போட்டிபோட முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என அச்சம் தெறிவித்துள்ளனர்.

 

3. இன்னும் சிலரோ சமச்சீர் கொலை என்று இக்கல்வித் திட்டத்தை வர்ணித்துள்ளனர். ஏனென்றால் புதிய பாடத்திட்டத்தின் கீழ் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள சமச்சீர் பாடப்புத்தகங்கள் முறையாக தொகுக்கப்டவில்லை என்றும் அதில் ஏராளமான எழுத்து மற்றும் இலக்கணப் பிழை இருப்பதாகவும் சில சான்றுகளை முன்வைக்கின்றனர்.

 

4. அரசியல் காரணங்களை வைத்துக்கொண்டு சில அரசியல் கட்சிகள் முட்டுக்கட்டை போடத் துவங்கியுள்ளன. கடந்த திமுக அரசால் இத்திட்டம் கொண்டுவரப்பட்டதால் அதை எதிர்கட்சிகள் எதிர்க்கும் போக்கு துவங்கியுள்ளது.

 

தேவையான நடவடிக்கைகள் என்ன?

தமிழக அரசு ஒரு குழுவை நியமித்து 2 வாரங்களில் அனைத்து சமச்சீர் புத்தகங்களையும் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க அந்த குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்பாகவே பளைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருவாதாக செய்திகள் தெறிவிக்கின்றன. மேலும் முதல்வர் ஜெ கருத்து தெறிவிக்கும் போது. சமச்சீர் பாடத்திட்டம் உலகத்தரத்தில் அமையவில்லை என்றும் அதை மேம்படுத்த வேண்டும் என்றும் தெறிவித்துள்ளார்.

 

எது எப்படியோ சமச்சீர் கல்வி என்பது சீரான மேம்படுத்தப்பட்ட கல்வியாக மாணவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்றும் அதனால் எதிர்கால மாணவர்களின் வாழ்கைக்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் பயணளிக்கும் வகையில் அமையவேண்டும் என்பதே அனைவரின் கருத்து. அதற்குத் தேவையான எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர். ஆனால் அதை அரசு கிடப்பில் போட்டுவிடாமலும், ரத்து செய்துவிடாமலும் நடைமுறைப்படுத்துவது குறித்து தெளிவான அரசின் முடிவை மக்களுக்கு தெறிவித்துவிட்டு செய்தால் நன்றாக இருக்கும்

 

அபு அஸ்பா

புதுவலசை.இன்