சோராபுதீன் வழக்கு முக்கிய சாட்சி அசம்கானை சுட்டு கொல்ல முயற்சி

15/09/2010 15:20

குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு சொரப்தீனை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த என்கவுண்டர் அரசியல்வாதிகள் தூண்டுதலின் பேரில் திட்ட மிட்டு போலியாக நடத்தப்பட்டதாக தெரிய வந்தது.
 
சோராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 12-க்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் குஜராத் மந்திரி அமீத் உஷாவும் கைதானார்.
 
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக அசம்கான் என்பவர் உள்ளார். இவரது சாட்சியத்தின்படிதான் முக்கிய புள்ளிகள் ஒருவர் பின் ஒருவராக கைதானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அசம்கானை நேற்று கொல்ல முயற்சி நடந்தது. உதய்பூர் நகரில் அசம்கான் தன் நண்பருடன் சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது காரில் வந்த மர்ம மனிதர்கள் அசம்கானை நோக்கி 2 ரவுண்டு சுட்டனர். இதில் அசம்கானின் இடது கையில் குண்டுகள் பாய்ந்தது.
 
படுகாயத்துடன் உயிர் தப்பிய அசம்கான் உதய்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

Maalaimalar