போலி டாக்டர்கள் ரைடு - தலைமறைவான புதுவலசை டாக்டர்கள்

04/04/2010 16:15

04-04-2010

 

 போலி டாக்டர்கள் ரைடு - தலைமறைவான புதுவலசை டாக்டர்கள்

கடந்த சில நாட்களாகவே போலி மருந்து தயாரித்த கும்பல் கைது செய்யப்பட்டுவரும் நிலையில் கடந்த வியாழன் அன்று இராமநாதபுரத்தில் மட்டும் 6 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர், அதில் மூவர் தேவிபட்டினத்தை சேர்ந்த ரமணி, சந்திர சேகர் மற்றும் குப்பை கனி ஆகியோர் ஆவர். இதைத் தொடர்ந்து எல்லா ஊர்களிலும் உள்ள போலி டாக்டர்கள் பற்றிய தகவல்களை திரட்டி தேவிபட்டினம் காவல் துறை ஆய்வாலர் தலைமையில் தேடுதல் வேட்டை துவங்கியது.

நமதூரில் பல ஆண்டுகளாக கோமியோபதி மருத்துவத்துடன் அலோபதி மருத்துவமும் பார்த்து வந்த சகோதரர் லியாக்கத் அலி அவர்களின் உறவினர் ஒருவர் ஆனந்தூரில் பிடிபட்டதைத் தொடர்ந்து அவர் ஊரில் இல்லை, அதே நேரத்தில் புனித வெள்ளிக்காக ஊருக்கு சென்று இருந்த சகோதரர் ஹென்றி ஆகிய இருவரும் அதிஷ்டவசமாக தப்பிவிட்டனர். கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடந்த தேடுதல் வேட்டையில் இவர்கள் இருவரும் ஊரில் இல்லை.

நம் போன்ற கிராமப்புற மக்களின் அவசர, அத்யாவசிய சிகிச்சைகளுக்காக நாம் இதுபோன்ற நபர்களை நாடவேண்டிய நிலை உள்ளது. அரசாங்கம் அமைத்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப் பட்டு இருந்தாலும் அங்கு தரமான மருத்துவமோ அல்லது 24 மணி நேரமும் மருத்துவர்களே இருப்பதில்லை. சில போலி மருத்துவர்களினால் ஏற்படும் தீங்கை விட சிலர் போலியானவர்களாக இருந்தாலும் அவர்களால் பல நன்மைகளும் உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.