“லோக் ஆயுக்தா”வை அமல்படுத்தி மோடிக்கு ஆப்பு வைத்த ஆளுனர்!

30/08/2011 14:58

குஜராத் மாநிலத்தில் மீண்டும் லோக் ஆயுக்தா அமைப்பை கொண்டு வந்ததுடன் அதற்கான நீதிபதியையும் நியமித்து அம்மாநில கவர்னர் பிறப்பித்த உத்தரவால் முதல்வர் நரேந்திர மோடி கலக்கமடைந்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கேசுபாய்பட்டேல் ஆட்சியின் போது லோக்ஆயுக்தா அமைப்பு இருந்தது. அதில் நீதிபதியாக எஸ்.எம்.சோனி என்பவர் இருந்தார். பின்னர் பா.ஜ.க.ஆட்சி அமைந்து முதல்வராக நரேந்திரமோடி பொறுப்‌பேற்றதும், உடனடியாக லோக்ஆயுக்தாவை கலைத்தார். லோக் ஆயுக்தா என்பது அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆட்சியாளர்களின் ஊழல்கள், செயல்பாடுகள் மற்றும் முறைகேடுகளை விசாரிக்கும் அமைப்பாக இருந்து வருகிறது. இதற்கு உதாரணமாக சமீபத்தில் கர்நாடகா மாநில லோக்ஆயுக்தா சுரங்க மோசடியை அம்பலப்படுத்தி முதல்வர் எடியூரப்பாவை பதவியிலிருந்து தூக்கி எறிந்ததையும் கூறலாம்.

இந்நிலையில் குஜராத் ஆளுநர் கமலாபெரிவால், நேற்று திடீரென லோக் ஆயுக்தா அமைப்பை மீண்டும் அமலுக்கு கொண்டுவந்து, அதன் நீதிபதியாக ஆர்.ஏ. மெகதா என்பவரை நியமனம் செய்து உத்தரவிட்டார். ஆளுநரின் இந்த திடீர் உத்தரவால் முதல்வர் நரேந்திரமோடி கலக்கமடைந்துள்ளார். முன்னதாக , முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், சில மாதங்களுக்கு முன்பு, ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கடந்த ஏழு ஆண்டுகளாக லோக்ஆயுக்தா அமைப்பு இல்லாததால், குஜராத் மாநிலத்தில் பா.ஜ. ஆட்சியின் முறைகேடுகள் குறித்து விசாரிக்க லோக்ஆயுக்தாவை மீண்டும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர்.

ஏற்கனவே , அமித்ஜிதேவ் என்ற சமூக ஆர்வலர், தகவல்அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முதல்வர் நரேந்திர மோடியின் ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரிக்க லோக்ஆயுக்தாவை மீண்டும் கொண்டுவர வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த சூழ்நிலையில், ஆளுநரின் இந்த திடீர் உத்தரவு, முதல்வர் நரேந்திரமோடிக்கு ஆப்பு வைப்பதாக உள்ளது. அமைச்சரவையினை கலந்தாலோசிக்காமல் லோக்ஆயுக்தாவை கொண்டுவந்தது அரசியலைப்புக்கு எதிரானது என பா.ஜ.க.வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

இந்நேரம்

 

இன்று காலை இது தொடர்பாக விவாதிப்பதற்காக மக்களவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று பா.ஜனதா நோட்டீஸ் கொடுத்திருந்தது. 

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

இதன்பின்னர் பா.ஜனதா எம்.பி.க்கள், அத்வானி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது,குஜராத் ஆளுனரை திரும்ப பெறக்கோரி பா.ஜனதா உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவையை தொடர்ந்து அவையை தொடர்ந்து அவையை தொடர்ந்து நடத்த முடியாமல் போனதால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
 
webdunia.com