"சுகப்பிரவசத்திற்கு' வழி வகுக்கும் ரோடு: பனைக்குளம் ஊராட்சி மக்கள் பரிதவிப்பு

03/08/2010 16:11

 03-08-2010

பனைக்குளம்: "சுகப்பிரவசத்திற்கு' வழி வகுக்கும் வகையில் இங்குள்ள ரோடு உள்ளதால் பனைக்குளம் ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.

மண்டபம் ஒன்றியத்தில் உள்ளது பனைக்குளம் ஊராட்சி .இங்குள்ள பிரதான ரோடு படு மோசமாக காட்சி தருகிறது . குறுகலான ரோடாக இருப்பதால் எதிர் எதிரே வாகனம் சென்றால் வாகன ஓட்டிகள் பல வித இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த ரோடை தேவிப்பட்டினம் வழியாக ராமேஸ்வரம் செல்வோர் அதிகம் பயன்படுத்துகின்றனர். திருச்சி வழியாக வரும் சுற்றுலா வாகனங்களும் அதிகம் பயன்படுத்துகின்றன. ரோடு போடப் பட்டதோடு சரி . அதன் பின் அகலப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுப்பட்டார்கள் என்றால் இல்லை. பராமரிப்பு பெயரில் அவ்வப் போது ,ரோட்டின்மேல் ஆங் காங்கே ஒட்டுப்போடுதை மட்டும் வழக்கமாக கொண்டுள்ளனர். கலெக்டர் ,அமைச்சர் என பலரிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்கின்றனர் இப்பகுதியினர்.

 

Photo: www.panaikulam.me

இதோ அவர்களின் ஆதங்கம்:

சகாபுதீன்: ரோட்டில் பஸ்சில் பயணம் செய்வதை , ரோட்டில் படகு செல்வது போவது போன்ற அனுபவத்தில் உள்ளோம். மழைக்காலம் என்றால் சொல்லவே வேண்டாம் .மழைநீர் ரோட்டில் தேங்கி,ரோடே தெரியாத நிலை உருவாகும் .

ஜகுபர் அலி:எத்தனை முறை மனுக்கொடுத்தாலும் மனுவுக்கு மரியாதை இல்லை.தேர்தல் வாக்குறுதியில் ரோடு போடப்படும் என்கின்றனர்.தேர்தல் வெற்றி பெற்ற உடன் எம்.எல்.ஏ.,வை இந்த பக்கத்தில் தேடவேண்டியதாகி உள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக ராமநாதபுரம் செல்ல வேண்டும் என்றால் கஷ்டமாக உள்ளது.

அப்துல்காதர்:ஒன்றிய கவுன்சிலராக நானும், எனது மனைவியும் இருந்தபோது பலமுறை கூறியும் ரோடு வசதி கிடைக்கவில்லை.புது ரோடு போடும்போது பழைய ரோட்டை நன்றாக உடைத்து ரோடு போட வேண்டும்.அது இல்லாமல் பழைய ரோட்டிற்கு மேல் டச் அப் செய்தால் ரோட்டில் நிலை இப்படித்தான் இருக்கும்.

ஊராட்சி தலைவர் சலாமுல் அன்சார் கூறியதாவது: ஊராட்சி தலைவர் என்ற முறையில் நல்ல ரோட் டிற்காக போராடி வருகிறேன்.கலெக்டரிடம் பல முறை மனுக்கொடுத் துள்ளேன். அமைச் சரிடம் எடுத்துக்கூறியுள்ளேன்,என்றார்.

https://www.dinamalar.com/News_detail.asp?Id=48624