"பலஸ்தீனரின் உரிமைகளுக்கு முன்னுரிமை " - கலாநிதி அபூசுஹ்ரி

19/12/2010 16:12

 

இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இனி பேச்சுவார்த்தைகளை மட்டும் நம்பிக் கொண்டிராமல், பலஸ்தீனர்களின் உரிமைகளை மீட்டெடுக்கக்கூடிய பிற வழிமுறைகளைக் கைக்கொள்ள முன்வருமாறு அரபுநாடுகளை நோக்கி கலாநிதி அபூசுஹ்ரி அழைப்பு விடுத்துள்ளார்.

 

கடந்த வியாழக்கிழமை (16.12.2010) கருத்துரைத்த அவர், .அரபு லீக்கின் தீர்மானமானது, இஸ்ரேலின் சட்டவிரோதமான குடியேற்ற விஸ்தரிப்பை மறைமுகமாக ஆதரிப்பதாகவே அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தி, அத்தகைய பயனற்ற முயற்சிகளுக்குத் தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் தெளிவான அறிக்கை ஒன்றை விடுப்பதோடு, அரபு-பலஸ்தீன் உரிமைகளைப் பாதுகாத்து, பலஸ்தீன் மக்களுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவாகப் புதிய உத்திமுறைகளைக் கையாள்வதற்கு அரபுலகம் முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கடந்த புதன்கிழமை (15.12.2010) பலஸ்தீன் விவகாரத்தில் அமெரிக்காவின் "சீரியஸான" தலையீடு இடம்பெறும்வரை இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதென அரபு லீக் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

inneram.com