அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட பணிகள்

09/11/2009 16:01

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

9-11-2009
 
நமதூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 
1. காயிதேமில்லத் நகரில் கடந்த மாதம் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையுடன் சேர்த்து மொத்தம் 3 சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன.
 
2. தெருவிளக்குகள் இல்லாத தெருக்களுக்கு தெருவிளக்குகள் அமைக்கப் பட்டு வருகின்றன. குறிப்பாக நமதூர் பேருந்து நிலையத்திற்கு கிழக்குப் புறமும் மேற்குப் புறமும் தெருவிளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன. 
 
3. நமதூர் செவுலத்து மைதானத்தின் தென் கிழக்கு மூலையில் ஊராட்சி மன்றத்தின் நூலகக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றன. 
 
4. பக்கிராத்து ஊரணி வெட்டெடுக்கப் பட்டுள்ளது.