அதிபருக்கு எதிராக போராட்டம்: ஏமனில் 41 பேர் சுட்டுக்கொலை

02/06/2011 15:20

அதிபருக்கு எதிராக போராட்டம்: ஏமனில் 41 பேர் சுட்டுக்கொலை ஏமன் நாட்டில் அதிபர் அலிஅப்துல்லா சலே பதவி விலக வற்புறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4 மாதமாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தில் இதுவரை 400-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

 
இந்த நிலையில் நேற்று சனா நகரில் மீண்டும் போராட்டம் வெடித்தது. மக்கள் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் நடந்தது. இதில் 41 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
 
சனா நகரில் அரசு கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டன. இதில் பல இடங்களிலும் தீ பரவி பெரும் சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து தெருக்களில் கலவரம் நடந்து வருகிறது. மோதலை தடுக்க ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.
 
ஏமனில் சனா நகரம் மட்டுமல்லாமல் மேலும் பல நகரங்களில் கலவரம் பரவி வருகிறது. அங்கும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

maalaimalar.com