அப்துல்கலாமின் பிறந்தநாள் தினமான அக் 14 ஐ உலக மாணவர் தினமாக ஐ.நா அறிவிப்பு

16/10/2010 12:38

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளை `உலக மாணவர் தினமாக' ஐ.நா. சபை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 1 கோடி மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடியுள்ள அப்துல் கலாமுக்கு, இன்று (அக்டோபர் 15) 79-வது பிறந்த நாளாகும். இதை முன்னிட்டு, 'உலக மாணவர் தினமாக' உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பொக்ரான் அணுகுண்டு சோதனை, அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகள், இந்தியாவின் முதல் சுய தொழில்நுட்ப செயற்கை கோள் என பல்வேறு அறிவியல் சாதனைகளுக்கு சொந்தக்காரரான அப்துல் கலாமுக்கு உலகம் முழுவதும் இருந்து பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்தன.