அமெரிக்காவில் 24 ஆயிரம் ராணுவ ரகசிய முக்கிய பைல்கள் கொள்ளை

18/07/2011 09:15

அமெரிக்காவில் 24 ஆயிரம் ராணுவ ரகசிய முக்கிய பைல்கள் கொள்ளை போயின.   அமெரிக்காவின் ராணுவம் மற்றும் அரசு அலுவலகங்களின் கோப்புகளை (பைல்களை) ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பாதுகாத்து வருகிறது. அதில் இருந்த ராணுவ வீரர்களின் இ-மெயில் முகவரிகள் திருடப்பட்டு தகவல்கள் கொள்ளை போனதாக செய்தி வெளியானது.

 
இந்த நிலையில் அமெரிக்கா ராணுவத்தின் முக்கிய ரகசிய பைல்களும் கொள்ளை போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 24 ஆயிரம் பைல்கள் திருடப்பட்டுள்ளன.   இதில் கம்ப்யூட்டரில் சைபர் குற்றங்கள் மேற்கொள்ளும் கும்பல் ஈடுபட்டிருக்கலாம். சீனா, அல்லது ரஷியாவிடம் இந்த தகவல்களை அவர்கள் விற்று இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகப்படுகிறது.
 
அதே நேரத்தில் இவற்றை தீவிரவாதிகள் கொள்ளையடித்திருக்கலாமோ என்ற அச்ச உணர்வும் அமெரிக்காவுக்கு உள்ளது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ துணை மந்திரி வில்லியம்லின் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் இந்த கொள்ளை நடந்திருக்கலாம் என்றும் அமெரிக்கா சந்தேகிக்கிறது.

maalaimalar.com