அமெரிக்காவை கலக்கும் அற்புத(?) வண்டி

20/09/2012 11:21

 


அமெரிக்காவை கலக்கும் அற்புத(?) வண்டி 

அமெரிக்காவை கலக்கும் அற்புத(?) வண்டி

      
      சகோதரர் பீஜே அவர்கள் முற்றுகையின் போது பேசிய கண்டன உரையில், நபிகளாரை இழிவுபடுத்தி ஒழுக்கங்கெட்டவர்களாக அவர்களை சித்தரித்த அமெரிக்க பாதிரியைக் கண்டிக்கும் விதமாகவும்,ஒழுக்கத்தைப் பற்றி பேச அமெரிக்கர்களுக்கு என்ன தகுதி உள்ளது என்று கேள்வியெழுப்பி ஒரு செய்தியை சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கர்களின் அப்பன் யார்?:

     அமெரிக்கர்களின் அப்பன் யார்? என்று அறிந்து கொள்வதற்கான டி.என்.ஏ. சோதனை செய்யும் வாகனம் பற்றிய செய்திதான் அது. இந்த அளவிற்கு வண்டி வைத்து ஆய்வு செய்து உங்களது அப்பன்மார்களை கண்டுபிடிக்கக்கூடிய கேவலமான நிலையில் இருக்கும் இந்த கிறித்தவப் பாதிரிகள் கூட்டமா எங்களது இறைத்தூதரை ஒழுக்கங்கெட்டவராக சித்தரிப்பது என்று கேள்வி எழுப்பினார்.

     கீழே புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் அந்த வாகனம்தான் சகோதரர் பீஜே அவர்கள் தனது கண்டன உரையில் சுட்டிக்காட்டிய வாகனம்.

   

      “Who is your dady?” என்று, அதாவது, “உங்க அப்பன் யார்?” என்ற கேள்வி பதித்த லோகோவோடு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வலம் வரும் இந்த வாகனத்திற்குத்தான் இப்போது அமெரிக்காவில் ரொம்ப கிராக்கியாம்.

   ஒரு குழந்தையின் அப்பாவை அறிமுகம் செய்வது அம்மா. ஆனால் அப்பா யார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் மரபணு சோதனை செய்துக்கொள்ளுங்கள் என்ற அறிவிப்புடன்,  நியூயார்க் நகரை வலம் வந்து கொண்டிருக்கிறது இந்த வாகனம்.

   இந்த வாகனத்தில் மரபணு சோதனை நடத்துவதற்கான அனைத்து பரிசோதனை வசதிகளும் உள்ளதாம். நிபுணர்கள் தயாராக உள்ளனராம். மரபணு சோதனை நடத்துவதற்காக, ஒரு நபருக்கு 16,235 ரூபாயிலிருந்து கட்டணம் ஆரம்பமாகின்றது (299 அமெரிக்க டாலர்கள்) என்றும், இந்த வாகனத்தைப் பற்றி விவரிக்கின்றார்,இந்த மகத்தான(?) தொண்டு நிறுவனத்தின்(?) சொந்தக்காரர் ஜார்டு ரோஷந்தால்.

   அதுமட்டுமல்ல, இந்த வாகனத்தின் மூலம் பலர் தங்களது உண்மையான அப்பாக்களையும், தங்களது உண்மையான பிள்ளைகளையும் கண்டுபிடித்து ஆனந்தப் பரவசமடைந்து செல்கின்றார்கள் என்று கூறி இந்த வாகனத்தினால் ஏற்படும் சமூகப் புரட்சி(?) குறித்துக்கூறி புலங்காகிதம் அடைகின்றார் ஹெல்த் ஸ்ட்ரீட் என்ற இந்த அப்பாக்களை கண்டுபிடிக்கும் நிறுவனத்தின் சொந்தக்காரர்  ஜார்டு ரோஷந்தால்.

   தினமும் நியூயார்க் நகரின் முக்கிய சாலைகளை சுற்றி வரும்போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் இந்த வாகனம் நிறுத்தப்பட்டு, ஏராளமான ஆண்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து இந்த குழந்தை தங்களுக்குப் பிறந்ததுதானா? என்று பரிசோதனை செய்கின்றனர். அந்த ஆய்வு முடிவுகள் சில நாட்களுக்குப் பின்னர் அவர்களுக்கு இமெயில் மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ அனுப்பிவைக்கப்படுகிறது.

   இதுபோன்ற சோதனைகள் மூலம் ஏராளமான தம்பதிகளிடையே தேவையற்ற மனக்கசப்பு ஏற்படுகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறியுள்ளனர். அமெரிக்காவில் ஏற்கனவே விவாகரத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இதுபோன்ற சோதனைகளினால் குடும்ப வாழ்க்கையில் விரிசல்கள் அதிகம் ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர். ஆனால் ஒரு சிலரோ இதுபோன்ற மரபணு சோதனைக்கு வரவேற்பு அதிகரிக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

நல்ல ஒழுக்க சிகாமணிகள்(?)

   இத்தகைய கேடுகெட்ட கலாச்சாரத்தைக் கொண்டுள்ள வர்கள்தான் உத்தமத்தூதரை ஒழுக்கமில்லாதவர் என்று கூறி படம் எடுக்கின்றார்கள்.

    உண்மையிலேயே இவர்களுக்கு மானம் என்ற ஒன்று உள்ளதா? என்பதுதான் நம் அனைவரது உள்ளத்திலும் எழும் ஒரே கேள்வி.