அயோத்தி தீர்ப்பும் எழுந்துள்ள சர்ச்சைகளும்

03/10/2010 09:55

கடந்த 30-9-2010 அன்று அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ கிளையின் 3 பேர் கொண்ட சிறப்பு அமர்வு அயோத்தி நிலம் தொடர்பாக வழங்கிய தீர்ப்பு நாடெங்கும் உள்ள முஸ்லிம்களாலும் நடுநிலையாளர்களாலும் செய்தி ஊடகங்களாலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீர்ப்பின் சாராம்சம் சட்டப்படியானதாக இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் உள்ளதாலும், அதனால் பாபர் மசூதி இடித்ததை நியாயப்படுத்தும் படி உள்ளதாலும், சங்பரிவாரங்களின் கருத்துக்களை எதிரொலிப்பாதாக உள்ளதாலும் இதையல்லாம் விட முஸ்லிம்களுக்கு அநீதி இளைக்கப்பட்டு இருப்பதாலும் இந்த விவாதங்கள் நாடெங்கும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு செய்தி ஊடகங்களும் இந்த தீர்ப்பு பெரும்பான்மை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்றும், கட்டப்பஞ்சாயத்து என்றும் இந்த தீர்ப்பு அளிப்பதற்க்கு இத்தனை பாதுகாப்பும், நீதிமன்றங்களும், நீதிபதிகளும் அவசியமே இல்லை என்றும், இந்தத் தீர்ப்புக்ககவா 60 ஆண்டுகள் என்றும் பல்முனையில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது.

தமிழக இஸ்லாமிய அமைப்பினரும் அதன் தலைவர்களும் தமது கண்டனங்களையும் ஆட்சேபத்தையும் தெறிவித்துள்ளனர்.

நீதிமன்றங்கள் காவிமன்றங்காளாகும் அவலம் நீடித்தால் இந்தியாவில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான நீதி கேள்விக் குறியாக்கப்பட்டுவிடும் என்றும் இந்த நாட்டில் முஸ்லிம்கள் அரசுமீதும் நீதித்துறைமீதும் கொண்டுள்ள நம்பிக்கை பொய்யாகிவிடும் என்றும் கருத்து தெறிவித்துள்ளனர்.

இத்தனைகாலங்களாக நீதிமன்றம் அயோத்தி விவகாரத்தில் தலையிட முடியாது என்ற கூறிவந்த சங்பரிவாரங்கள் தீர்ப்பு வெளியாகும் முன் நாங்கள் நீதி மன்ற தீர்ப்பை மதிப்போம் என்றும் ராமருக்கு வெற்றிகிடைக்கும் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளது, தீர்ப்பு பற்றி இவர்கள் முன்னரே அறிந்திருந்ததாகவே தெறிகிறது என்றும் இதை விசாரிக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிருவனர் சகோதரர் பி.ஜெய்னுல் ஆபிதீன் தெறிவித்துள்ளார்.

இத்தனை காலமாக பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்கு இல்லை என்பது போல் நீதிமன்றங்கள் தடுத்து வைத்துதிருந்ததுக்கு பிறகு முஸ்லிம்களுக்கு 3ல் 1 பங்கு தீர்ப்பு வழங்கியதிலிருந்து இந்த இடம் முஸ்லிம்களுக்கு சொந்தம் என்பது நிருபனமாகிறது என்றும், உபி வக்பு வாரியத்தின் மேல் முறையீட்டு முடிவை ஆதரிப்பதாகவும் தமுமுக தலைவர் எச்.ஜவாஹிருல்லாஹ் கூறியுள்ளார். 

இந்த தீர்ப்பு வழக்கில் சமர்பிக்கப்பட்ட உண்மை மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் இல்லாமல் வெறுமனே மத நம்பிக்கையின் அடிப்படையிலே வழங்கப்பட்டுள்ளது நமக்கு வேதனையளிக்கிறது என்று பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா கூறியுள்ளார்.

அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். இவ்வழக்கின் தீர்ப்பு பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்துவதாக இருக்கிறது என்றும் இதை ஊடகங்கள் மற்றும் மத தலைவர்கள் பெரிது படுத்த வேண்டாம் என்றும் உச்சநீதி மன்றத்தை நாட 3 மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது அதுவரை அந்த இடம் பிரித்துக் கொடுக்கப்படாது என்றும் கூறியுள்ளார்.அதே நேரத்தில் பா.ஜ.க தலைவர்கள் கோவில் கட்டுவோம் என்று கூறவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்க்கு பா.ஜ.க சார்பில் கண்டனம் தெறிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பால் ஏற்பட்டுள்ள அச்சம்

1. இந்தத தீர்ப்பு பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்று இருந்தாலும் முஸ்லிம்களைப் பொருத்தவரை இந்த தீர்ப்பு நீதிமன்றம் காவிமன்றமாகி விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் நீதி கிடைப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை உணர்த்துகிறது.

2. மேலும் நிலுவையில் உள்ள பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற இப்போதே அச்சாரம் போட்டுள்ளதாக தெறிகிறது. பள்ளிவாசல் இருந்த இடம் ராமருக்கு சொந்தம் என்றால் அந்தப் பள்ளியை இடித்தது சரிதான் என்று நீதிமற்றம் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை.

3. அதுமட்டுமின்றி சங்பரிவாரங்களின் அட்டூழியம் தொடரவும் இந்த தீர்ப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கையை காரண்ம்காட்ட முஸ்லிம்களின் மற்ற சொத்துக்களின் மீது கைவைக்கவும் இனி தயங்கமாட்டார்கள் என்ற அச்சத்தை ஒரு செய்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

4. இந்த தீர்ப்பு சங்பரிவாரங்களின் செய்ல்களை அங்கீகரிக்கும் வண்ணம் இருப்பதால் அவர்களால் பட்டியலிடப்பட்டுள்ள காசி, மதுரா உள்ளிட்ட 3000 பள்ளிவாசல்களும் இதே பாணியில் கைப்பற்ற அந்த கும்பல் முயற்சிக்கும் வகையில் தீர்ப்பு அவர்களையும் அவர்களால் தினிக்ப்பட்டுள்ள அவர்களின் நம்பிக்கை வாதத்தையும் நியாயப்படுத்தியுள்ளது, கவலையளிக்கிறது.

5. இந்த தீர்ப்பைக் காரணம் காட்டி நாடெங்கும் பாதுகாப்பு என்ற பெயரிலும், தீவிரவாதி ஊடுருவல் என்ற பெயரிலும், முன்னெச்சரிக்கை என்ற பெயரிலும் தொடர்ந்து முஸ்லிம்கள் கைதுசெய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற நிலையால் பாதிக்கப்படடுள்ள முஸ்லிம்களுக்கு இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

6. அதைவிட மேலாக அரசு இவ்விசயத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சங்பரிவாரங்கள் தீர்ப்பை விலை கொடுத்து வாங்கியுள்ளது தெளிவாகத் தெறியும் நிலையில் இதற்க்கு ஒரு சிபிஐ விசாரனைக்கு அரசு உத்தரவிடவேண்டும் இல்லையேல் எதிர்வரும் காலங்களில் நீதியை பெற யாரும் கோர்ட்டுக்கு செல்லமாட்டார்கள். என்பதை அரசு புறிந்துகொள்ள வேண்டும்.

7. உச்சநீதிமன்றமும் முஸ்லிம்களை ஏமாற்ற நினைத்தால் அது இந்த நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்பதையும், முஸ்லிம்கள் தமது உரிமையை மீட்க்க எவ்வித போராட்டத்திற்கும் தயாராவார்கள் என்பதையும் ஆளும் வர்கம் புறிந்துகொள்ள வேண்டும்.

அபு அஸ்ஃபா, புதுவலசை