அயோத்தி நிலம்: உச்சநீதிமன்றத்தில் வக்ஃப் வாரியம் மேல்முறையீடு

15/12/2010 11:48

அயோத்தி நில வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சன்னி வக்ஃப் வாரியம் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

 

 

 

"சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரிப்பதை ஏற்க முடியாது. மேலும், ராமர் பிறப்பிடத்தில் கட்டடம் இருந்ததாக உயர்நீதிமன்றம் தவறுதலாக கூறியுள்ளது." என்று தனது மனுவில் வக்ஃப் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அகில பாரத இந்து மகாசபை, ஜமிதய் உலாமா-இ-ஹிந் ஆகியவை ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் மூன்று விதமான தீர்ப்புகளை வழங்கினர். எனினும், தற்போது ராமர் சிலை உள்ள இடம் இந்துக்களுக்கு சொந்தமானது என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.

dinamani.com