அயோத்தி: பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண ஷியா முஸ்லிம் வாரியம் ஆதரவு

04/11/2010 11:27

அயோத்தி விவகாரத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண ஷியா முஸ்லிம் வாரியம் ஆதரவு தெரிவித்துள்ளது.

 

 இது தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள கைசர்கஞ்ச்சில் அனைத்திந்திய ஷியா முஸ்லிம் வாரியத் தலைவர் மிர்சா முகமது அட்டார் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தது:

 

 அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக அலாகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

 

 இந்தத் தீர்ப்பில் உடன்பாடு இல்லாதவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். தீர்ப்பினால் யாருடைய மனதும் புண்படக்கூடாது. எனவே, அயோத்தி பிரச்னையில் நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதே அனைவருக்கும் சிறந்ததாக இருக்கும் என்றார் அவர்.

 

 உயர் நீதிமன்ற தீர்ப்பின்போது மக்கள் மிகுந்த பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்துகொண்டனர்.

 

 அவ்வாறே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும்போது நடந்துகொள்வார்கள் என தான் நம்புவதாக மிர்சா தெரிவித்தார்.

தினமணி