அயோத்தியில் மசூதி கட்டவிட மாட்டோம்: விசுவ இந்து பரிஷத் அறிவிப்பு

21/11/2010 17:25

அயோத்தியில் மசூதி கட்டவிட மாட்டோம்:  விசுவ இந்து பரிஷத் அறிவிப்புஅயோத்தியில் ராம ஜென்ம பூமி நிலத்தை இந்துக்கள் இரு பங்கும் முஸ்லிம்கள் 1 பங்கும் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலகாபாத் ஐகோர்ட்டில் தீர்ப்பு கூறியது. இந்த நிலையில் சாதுக்கள் விழா ஒன்று அயோத்தியில் நடந்தது. இதில் விசுவ இந்து பரிஷத் தலைவர் தொகாடியா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
 
அயோத்தியில் ராமர் பிறந்த இடம் இதுதான் என்பதை உறுதியாக நம்புகிறோம். இந்த இடத்தில் புதிய மசூதி கட்டுவதற்கு நாங்கள் ஒரு போதும் அனுதிக்க மாட்டோம்.
 
இங்குள்ள 67 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து மிகப் பெரிய ராமர் கோவிலை கட்டுவோம்.
 
விசுவ இந்து பரிஷத் நாடு முழுவதும் அனுமந்த் சக்தி யாத்திரை என்ற யாத் திரையை தொடங்க உள்ளது அதன் மூலம் ராமர் கோவில் கட்டுவதற்கு மக்களின் ஆதரவை திரட்டுவோம்.
 
இந்துக்களும் முஸ்லிம்களும் கலாச்சார ரீதியாக ஒன்றாக வாழ முடியாது என்று முகமது அலி ஜின்னாவே கூறி இருக்கிறார். அப்படி இருக்க மசூதியும், ராமர் கோவிலும் அருகருகே எப்படி இருக்க முடியும்.
 
ப.சிதம்பரம் காவி தீவிரவாதம் என்று கூறுகிறார். அனைத்து காவி துணிக்கு பின்னாலும் வெடி குண்டு இருப்பதை அவர் பார்த்து இருக்கிறார் என கருதுகிறேன்.
 
அயோத்தியில் மசூதியும் கட்ட வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரிக்கை விடுப்பதை நிறுத்தி விட்டு ராமர் கோவில் கட்டுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
 
இவ்வாறு தொகாடியா பேசினார்.

maalaimalar.com