அரசு டிரைவர் பணிக்கு பதிவு செய்ய வரும் 31ம் தேதி கடைசிநாள்

28/08/2010 21:58

கலெக்டர் அலுவலத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஈப்பு டிரைவர் காலிபணியிடத்திற்கு ஆட்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவு செய்த எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, இலகு ரக வாகன டிரைவிங் லைசன்ஸ் பெற்றவர்கள் இதற்கு தகுதியானவர்கள். 2010 ஜூலை ஒன்றின் படி வயது 35 , விதிமுறைகளின் படி தளர்வும் உண்டு.

இட ஒதுக்கீட்டில் முன்னுரிமையற்ற பகிரங்க போட்டி உள்ளது. 1987 செப்., 22 உத்தேச பதிவு மூப்பு நாளாக எடுக்கப்பட்டுள் ளது. தகுதியுடைவர்கள் ஆக.,31க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் அடையாள அட்டையுடன் நேரின் அணுகி, பரிந்துரை செய்யப்பட்ட விபரத்தினை அறிந்து கொள்ளலாம்.