அரசு பஸ்-கார் மோதல்: ராமநாதபுரம் எம்எல்ஏ அசன்அலி காயம்

07/09/2010 10:37

திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ்ஸýம் எம்எல்ஏவின் காரும் மோதிக் கொண்டதில் சிறிய காயங்களுடன் எம்எல்ஏ உயிர்தப்பினார்.

ராமநாதபுரம் எம்எல்ஏவான அசன்அலி தனது மனைவி ராம்லா மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் புறவழிச் சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் மீது விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் மோதியது.

இதில் எம்எல்ஏ அசன்அலிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடன் வந்த மூன்று குழந்தைகள் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிறிய காயங்களுடன் உயர் தப்பினர். இவர்கள் அனைவரும் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

 

Dinamani