அரசு 108 ஆம்புன்ஸ் சேவையில் ட்ரய்வர் மற்றும் உதவியாளர் வேலை வாய்ப்பு

10/09/2012 18:35

 

உயிர்காக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற விரும்புவோருக்கான வேலை வாய்ப்பு முகாம், சென்னை அடுத்த, திருவள்ளூரில் நடக்கிறது. தமிழகத்தில் உயிர்காக்கும் அவரச சேவைக்கான, 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராகவும், ஓட்டுனராகவும் பணியாற்றுவதற்கான வேலை வாய்ப்பு முகாம், வரும், 12ம் தேதி திருவள்ளூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள, 108 மையத்தில் நடக்கிறது.

மருத்துவ உதவியாளர்

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பம் உள்ளோர், 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆண், பெண் இரு பாலினத்தவரும் கலந்து கொள்ளலாம். மூன்று ஆண்டு அறிவியல் சார்ந்த இளங்கலை (பி.எஸ்.சி.,) படிப்புடன், டி.பார்ம் இரண்டாண்டும், பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடமும் பயின்றிருத்தல் அவசியம். மேலும், செவிலியர் பிரிவில், மூன்று ஆண்டுகள் அல்லது குறைந்த பட்சம் இரு ஆண்டுகள் படித்தவர்களும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

ஓட்டுனர் பணி

ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணிக்கு, 25 முதல் 35 வயதிற்குட்பட்ட, ஆண்கள் 162.5 செ.மீ., உயரத்திற்குக் குறையாமல் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஓட்டுனர் உரிமம் பெற்ற பின், குறைந்தது ஐந்தாண்டுகள் அனுபவம் (எல்.எம்.வி.,) பெற்றிருத்தல் வேண்டும். கனரக வாகன உரிமத்திற்கான பயிற்சி மற்றும் பதிவின் நகல் (எல்.எல்.ஆர்.,) அவசியம்.

தகுதி உடையோர் தங்களது கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்ப்பிற்காகக் கொண்டு வரவேண்டும். நேர்காணலில் தேர்ச்சி பெறும் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பணியமர்த்தப்படுவர்.

நேர்காணல், காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கும். இதுகுறித்த விவரங்களை அறிய, 044 – 2888 8060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

tntj.net