அரபி ஒளியுல்லா பள்ளிக்கான கோவிந்தராஜன் குழுவின் கட்டணம்

21/10/2010 15:36

தமிழக அரசின் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள கோவிந்தராஜன் குழுவின் அறிக்கையில் வரிசை எண் 4ல்  இராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளின் 61 ஆவது வரிசை எண்ணில் புதுவலசை அரபி ஒளியுல்லா உயர்நிலைப்பள்ளிக்கான கட்டண விபரம் இடம்பெற்றுள்ளது. இதை https://www.tn.gov.in/departments/sedu/priv_Sch_Fee.pdf?choice=ot4 என்ற முகவரியில் பார்க்கலாம்.

அந்த நீதிபதியின் பரிந்துகரைப்படி நமதூர் பள்ளியில் 9ம் வகுப்புக்கு ரூபாய் 2,450 எனவும் 10ம் வகுப்புக்கு ரூபாய் 1,450 எனவும் நிர்னயிக்கப் பட்டுள்ளது.

மேலும் 955 பக்கங்கள் கொண்ட அந்த கட்டண அறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மாவட்ட வாரியாக தொகுக்கப் பட்டுள்ளது.

உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை இதில் தெறிந்து கொள்ளலாம். உதராரணத்திற்கு நஜியா மெட்ரிகுலேசன் பள்ளி, செய்யதம்மாள், நேசனல் அகாடமி என அனைத்து பள்ளிகளின் தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் உங்களுக்கு தேட முடியவில்லை என்றால் பள்ளி விபரத்தை வைத்து தேவையுடையவர்களுக்கு அனுப்பியும் தரப்படும். நம்மை தொடர்பு கொள்ள

அரபி ஒளியுல்லா உயர்நிலைப்பள்ளி, நேசனல் அகாடமி உச்சிப்புளி, நஜியா மெட்ரிகுலேசன் பள்ளி ஆகிய பள்ளிகளின் கட்டணங்களைக்காண