அரியலூரில் அக். 21 முதல் 26 வரை ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு: இராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பு

13/10/2010 16:22

இம்மாதம் 21 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள்கள் சேர்ப்பு முகாம், அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிப்பாய் டெக்னிக்கல், நர்சிங் உதவியாளருக்கு பிளஸ் 2 தேர்ச்சி (50 சதவிகித மதிப்பெண்கள்), வயது 17.5 முதல் 23 வரை, சிப்பாய்க்கு (பொதுப்பணி) 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி (45 சதவிகித மதிப்பெண்கள்), வயது 17.5 முதல்  21 வரை, சிப்பாய் தொழில் நுணுக்கமறிந்தவர் பதவிக்கு 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும், ஐ.டி.ஐ. படிப்பும் படித்திருக்க வேண்டும். வயது 17.5 முதல் 23 வரை.சிப்பாய், கிளார்க், ஸ்டோர் கீப்பர் பதவிகளுக்கு பிளஸ் 2 தேர்வில் 50 சதவிகித மதிப்பெண்களும், 10 ஆம் வகுப்பு தேர்வில் 45 சதவிகித மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். வயது 17-23 வரை.

இப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல இயக்குநரை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani