ஆசனி அருகே தோப்பில் ஏற்பட்ட தீ விபத்து

02/07/2012 19:59

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இன்று மதியம் 2 மணியளவில் நமதூர் கிழக்குத் தெரு ஆசனி ஊரணி அருகே அமைந்துள்ள தோப்பில் திடீர் என ஏற்பட்ட தீவிபத்தல் பல மரங்கள் எறிந்து சாம்பளானது. தீ மளமளவென பரவி அடுத்த தோப்புக்கும் பாய்ந்தது. இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. தீயணைப்புத் துறைக்கு தொடர்பு கொண்டு தீயணைப்பு வாகனம் மூலம் தீ அணைக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிற்கப்பட்டது.