ஆட்டோவில் தனியாக சவாரி சென்ற பெண் கற்ப்பழிப்பு....

03/10/2010 13:17

ராமநாதபுரத்தில் ஆட்டோவில் சவாரிக்கு வந்த பெண்ணை , நண்பருடன் சேர்ந்து கற்பழித்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி உமாமகேஸ்வரி(28). ராமநாதபுரம் கோகுல் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்ல, நேற்று காலை ராமநாதபுரம் புது பஸ்ஸ்டாண்ட வந்து இறங்கி, அங்கிருந்த ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை ராமநாதபுரத்தை சேர்ந்த முனியசாமி(28) ஓட்டிச்சென்றார். சிறிது தூரத்தில் அவரது நண்பர் பாலசுப்பிரமணியன் என்பவரை தனது சீட்டில் ஏற்றிக்கொண்டார். பசும்பொன் நகர் சமுதாயகூடத்தில் ஆட்டோவை நிறுத்திய இருவரும், மகேஸ்வரியை உள்ளே இழுத்துச்சென்று கற்பழித்தனர். சம்பவத்திற்கு பின் விரட்டியடிக்கப்பட்ட மகேஸ்வரி, கண்ணீருடன் பி.1 போலீசில் புகார் செய்தார். அங்கு வந்த போலீசார், மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர். தினமலர்