ஆண்டுவிழா - மீண்டும் துவக்கப்பட்ட ஆடலும் பாடலும்

01/03/2012 09:31

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நமதூர் அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா நடைபெற்றது. பொதுவாக ஆண்டுவிழாக்கள் பல நோக்கங்களுக்காக நடத்தப்படுகிறது. மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டுவரும் விதமாக விளையாட்டுப் போட்டிகள். வினாடிவினா போட்டிகள், பேச்சு மற்றும் எழுத்துத் திறமைகளை சோதிக்கும் போட்டிகள். சமூக விழிப்புணர்வு சம்மந்தமான நாடகங்கள் மூடநம்பிக்கைக்கு எதிரான நாடகங்கள் போன்றவைகள் அந்த விழாக்களில் அங்கம் வகிக்கும் முக்கிய நிகழ்ச்சிகள். இதுதவிர பல பள்ளிகள் கலைநிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன. நமதூரில் கடந்த நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் கலை நிகழ்ச்சிகளை எல்லாம் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த கலைநிகழ்சிகள் மூலம் ஏற்பட்ட சில அசம்பாவிதங்களும் இதற்குக் காரணம் என்று சொல்லாம். 

 

பொதுவாக சிறு வயதில் நாம் நம் பிள்ளைகளுக்கு எதை கற்றுத் தருகிறோமோ அதில் தான் அவர்கள் ஆர்வமாக இருப்பார்கள். பள்ளி மாணவ மாணவிகளுக்கு மத்தியில் இன்று சாதாரனமாக புதியபட சீடிக்கள் பரிமாறிக்கொள்ளப் படுகிறது. பெற்றோரே பிள்ளைகளிடத்தில் மற்ற சக மாணவர்களிடம் இருந்து பெற கற்றுக் கொடுக்கிறார்கள். பல்வேறு சமூக சீர்கேடுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. மேடைகளில் ஆடும் மாணவிகள் அதற்குப் பிறகு மற்ற உள்ளுர் மற்றும வெளியூர் இளைஞர்களால் விமர்சிக்கப்படுவதும் தொடர்கதையாகவே இருந்துவந்தது, ஆடும் மாணவ மாணவிகளுக்கும் தாம் ஒரு ஹீரோ அல்லது ஹீரோயின் போன்ற ஒரு எண்ணம் தோன்றுவதும் இயற்கையே. அதில் பெரியவர்கள் அல்லது சிரியவர்கள் என்ற விதிவிலக்கெல்லாம் கிடையாது. 

 

எத்தனையோ இடையறாத பணிச்சுமைகளுக்கு மத்தியில் இந்த தீவிர சிந்தனை உங்களுக்கு எப்படி வந்தது??

 

கடந்த காலங்களில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கலைநிகழ்ச்சிகள் இந்த வருடம் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. 5ஆம் வகுப்பு  மாணவ மாணவிகள் வரைக்கும் அதில் ஆட அனுமதிக்கப்பட்டார்கள். (கண்ணித் தீவு பெண்ணா கட்டழகுக்கண்ணா கட்டுமரம் போல வந்து ......... காட்டுரா .......... இது அந்த வயது மாணவ மாணவிகளுக்கு தேவைதானா?) இதை மீண்டும் துவக்குவதற்கு என்ன நிர்பந்தம் ஏற்பட்டது? பல பள்ளிகள் போட்டிக்காகவும், மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் நம் பள்ளியில் சேர வேண்டும் என்ற வியாபார நோக்கத்திற்காகவும் பிரம்மாண்டமாக ஆண்டுவிழாக்களை நடத்துகிறது. ஆனால் நம் பள்ளிக்கொன்று ஒரு நல்ல பெயர் இருக்கவே செய்கிறது. நம் ஜமாஅத் நிர்வாகத்தில் இயங்கும் பள்ளி என்பதால் வியாபார நோக்கம் இருக்கவும் வாய்ப்பில்லை. இரண்டு இயக்கங்கள் இந்த நிகழ்ச்சிகளை மீண்டும் அனுமதிக்கக் கூடாது என கடிதமும் ஜமாஅத்திற்கு கொடுத்துள்ளது. ஜமாஅத் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இதற்கு எப்படி அனுமதி அளித்தார்கள் என்று தெறியவில்லை.... (இதெல்லாம் ஒரு பெரிய சிரச்சனையா... அவன் அவன் Internet, email னு போய்கிட்டு இருக்கான் இந்தக்காலத்தில் வந்து அத நிறுத்து இத நிறுத்து என்றால் எப்படி நிறுத்துவது)

ஒரு சமூகத்தில் தலைவர்களாக அங்கம் வகிப்பவர்களுக்கு அந்த சமூகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைக்கும் பெறுப்பு இருக்கிறது. எப்படி மின் வெட்டுக்கு தமிழக அரசுமீது குற்றம் சுமத்துகிறோமே அப்படி. 

 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
 
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
 
புஹாரி 7138. 

 

Topic: ஆண்டுவிழா - மீண்டும் துவக்கப்பட்ட ஆடலும் பாடலும்

Date: 22/03/2012

By: puduvalasai face

Subject: ஆண்டுவிழா - மீண்டும் துவக்கப்பட்ட ஆடலும் பாடலும்

ivangalukku vera vela iruntha thanei poruppu illathavangatta poi poruppa oppadacha appadithan irukkum... allah tta dhuvaa seivom ellorum namathoorukku nalla nirvaagam varanumnu...

New comment