ஆபரேசனுக்காக வசூலிக்கப்பட்ட தொகை விபரம் (நமக்கு வந்தவரை)

31/05/2010 13:23

 

Socail Works

 

சகோதரர் இக்பால் அவர்களின் மருத்துவ செலவுக்காக குவைத் தவ்ஹீத் சகோதரர்கள் சார்பில் ரூபாய் 16,000 வழங்கப்பட்டது.

 


  அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரர் இக்பால் அவர்களின் கிட்னி அறுவைசிகிச்சைக்காக இதுவரை 5.5 இலட்சங்கள்(கடைசியாக துபையிலிருந்து தமுமுக சார்பில் வந்த 38,000த்தை சேர்த்து)  வந்து சேர்ந்துள்ளன. மருத்துவ சிகிச்சை ஆரம்பித்தாலும் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்துதான் கிட்னி அறுவைசிகிச்சை செய்யமுடியும். ஆதலால் சகோதரர் இக்பால் அவர்கள் தமது சிகிச்சைக்கான வேலைகளை துவங்குவதற்க்காக வரும் 23-4-2010 சென்னை செல்ல இருக்கிறார்கள். அங்கு தனியாக மருத்துவமனைக்கு அருகில் ரூம் எடுத்து தங்கி, தம் சிகிச்சையை தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.

 

 

 கிட்னி தானம் செய்வதற்க்கு புரோக்கர் மூலம் ஆல் தயார் செய்துவிட்ட நிலையில் அவர்களது ஆபரேசன் விரைவில் நடந்து முடிய இறைவனிடம் பிரார்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கிட்னி ஆபரேசனுக்காக வசூலித்த தொகையை அனுப்பி விட்டீர்களா?

அன்பார்ந்த சகோதரர்களே சகோதரர் இக்பால் கிட்னி ஆபரேசனுக்காக வசூல் செய்து அனுப்பிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் புதுவலசை ஜமாஅத் வெப் சார்பாக மனமார்ந்த நன்றியை தெறிவித்துக் கொள்கிறோம். வசூல் செய்து பணம் அனுப்பாமல் இருக்கும் சகோதரர்கள் மேலும் தாமதிக்காமல் விரைவில் சகோதரர் இக்பால் அவர்களின் வங்கிக் கணக்கிற்க்கு அனுப்பிவைக்கவும். வசூல் செய்ய ஆள் இல்லாத பகுதியில் இருக்கும் சகோதரர்கள் தங்களின் பங்களிப்பை ஊரில் இருக்கும் தம் உறவினர்களின் மூலம் அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 இதுவரை சகோ. ஜாபிர் உசேன் மற்றும் சகோ. ஜெயின் ஆகியோர் மூலமாக துபாயில் இருந்து வந்த ரூ. 50,000த்தையும் சேர்த்து மொத்தம் 4.7 இலட்சங்கள் வங்கி கணக்கிற்க்கு வந்துள்ளது. குறைந்த பட்சம் இன்னும் இரண்டு இலட்சங்களாவது இருந்தால் தான் ஆபரேசன் செலவுக்கு மட்டுமாவது போதுமானதாக இருக்கும்.

 இந்நிலையில் சகோ. இக்பால் அவர்கள் தமது சிகிச்சைக்காக இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்தமாதம் முதல் வாரத்திலோ சென்னை செல்ல இருக்கிறார்கள். ஆகவே பணப்பற்றாக்குறை கருதி உதவி செய்தவர்கள் முடிந்தவரை தங்களால் இயன்ற அளவுக்கு மக்களிடம் வசூலித்து, வசூலித்த தொகையை விரைவில் அனுப்பிவைக்கவும்.

 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களுக்கும் கடமையாகும் என்று..

 மக்கள், ஏதும் கிடைக்கவில்லை என்றால் என்று கேட்டனர்

 நபி(ஸல்) அவர்கள், தமது இரண்டு கைகளால் உழைத்து தாமும் பயன் பெற்று பிறருக்கும் பயனடையச் செய்வார்கள் என்று கூறினார்கள்

 மக்கள், உழைக்க உடலில் தெம்பு இல்லையானால் என்றனர், பின் அதைச் செய்யாவிட்டால் என்ன? என்றனர்.

 நபி(ஸல்) அவர்கள், பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும் என்றார்கள்.

 மக்கள், அதையும் அவர் செய்ய இயளவில்லை என்றால்? என்றனர்...

 நபி(ஸல்) அவர்கள், நல்லதை அல்லது நற்செயலை அவர் ஏவட்டும் என்றார்கள். அதையும் செய்யாவிட்டால் தீங்கு செய்யாமல் இருக்கட்டும் அதுவே அவருக்கு தர்மம்ஆகும் என்றார்கள்

 அபு மூஸா அல் அஷ்அரி(ரலி) நூல் புஹாரி 6022, 6540

 அந்நாளில் (மறுமை நாளில்) தனது செயல்களைக் காண்பதற்காகப் பல பிரிவினர்காக ஆவார்கள், அணு அளவு நன்மை செய்தவர் அதைக்காண்பார், அணு அளவு தீமை செய்தவர் அதைக்காண்பார். (அத்யாயம் அஸ்ஸில்ஸால் 99 வசனம் 6-8.)


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்களது பங்களிப்பை செழுத்திவிட்டீர்களா...

சகோதரர் இக்பால் அவர்களின் கிட்னி ஆபரேசனுக்கு நமதூர்வாசிகளிடம் உதவி கோரி தமது பங்களிப்புகளை செழுத்திவருகின்றனர்.

மலேசியாவிலிருந்து மட்டும் சுமார் 2.5 லட்சங்களுக்கு மேல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து சகோதரர் ஜஹாங்கீர் மற்றும் அசோக் மூலமாக ரூபாய் 12.500ம்

தாசின் அரக்கட்டளை சார்பில் ரூபாய் 25000ம்

சகோதரர் ஹம்ஸா மற்றும் ஜபா் மூலமாக 23000ம் அனுப்பப் பட்டுள்ளது.

 இதுவரை மொத்தமாக ரூபாய் 3.68 லட்சங்கள் உதவியாக வந்துள்ளது.

 இந்நிலையில் சகோதரர் இக்பால் அவர்களின் கிட்னி மாற்று அறுவைசிகிச்சைக்கான ஏற்ப்பாடுகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. பெறப்பட்டுள்ள தொகை மிகக்குறைவாக இருப்பதால் உங்கள் உதவிகளை உடனே செழுத்தி இவ்வுயிர் காக்க உதவுவேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

அப்துல் ஹலீம்

புதுவலசை ஜமாஅத் வெப்.