ஆப்கனில் ஜூலையில் அமெரிக்க படைகள் வெளியேறும்: தூதர்

15/11/2010 21:24

 ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க கூட்டுப்படைகள் அடுத்தாண்டு (2011) ஜூலை மாதத்திற்குள் விலக்கிக்கொள்ளப்படும் என பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ரிச்சர்டு ஹால்புரூக் தெரிவித்தார். இஸ்லாமாபாத் வந்திருந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பயங்கரவாத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் இணைந்து செயலாற்ற வேண்டும். ஆப்கானிஸ்தானில் அதிபர் ஹமீத் கர்சாயை நீக்க வேண்டும் என்ற தலிபான்கள் கோரிக்கையை ஏற்கமுடியாது. பாகி்ஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில் பாகிஸ்தான் ராணுவமும்,அரசும் தான் புதிய யுக்தியை கையாள வேண்டும் இதற்கு நேட்டோ உதவி செய்யும். அடுத்தாண்டு (2011) ஜூலை மாதத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து ‌அமெரிக்கப்படைகள் விலக்கிக்கொள்ளப்படும். இதற்காக நேட்‌டோ நாடுகளில் மாநாடு அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் ஒபாமா தலைமையில் நடக்கவுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டு்ள்ளது. அப்போது படைகளை திரும்பப்பெறுவது குறி்த்து விவாதிக்கப்படும் .பிறகு ஆப்கானிஸதானில் பாதுகாப்பு இனி அந்நாட்டு மக்கள் கையில் தான். இவ்வாறு அவர் கூறினார்.
 Dinamalar.com