ஆப்கன் தீவிரவாதிகளை அழிக்க ’எக்ஸ்.எம்.25’!

01/12/2010 17:35

ஆப்கானிஸ்தானில் கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்க ராணுவம் முகாமிட்டுள்ளது. அங்கு தீவிரவாதிளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், அவர்களை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. 

 

அவர்கள் அங்குள்ள மலைப்பகுதியில் பதுங்கி மறைந்திருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே, அவர்களை ஒழித்து கட்ட அதி நவீன துப்பாக்கியை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். 
 
இந்த துப்பாக்கி கட்டிடங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை தாக்கி அழிக்கும் திறன் படைத்தது. இதற்கு எக்ஸ்.எம். 25 ரக துப்பாக்கி என பெயரிடப்பட்டுள்ளது.

 


இந்த நவீன ரக துப்பாக்கியால் 2300 அடி தூரத்தில் உள்ள மலைப் பகுதியில் அல்லது.

கட்டிடங்களுக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை சுட்டு அழிக்க முடியும். இந்த துப்பாக்கியை இந்த மாதம் முதல் பயன்படுத்த அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.

nakkheeran.in