ஆப்கானிலிருந்து பிரிட்டிஸ் படைகள் வெளியேற்றம்

20/09/2010 14:23

கடந்த 2001ம் ஆண்டுமுதல் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் அமெரிக்க கூட்டுப்படையின் போரின் ஒரு கட்டமாக பிரிட்டிஸ் படைகள் ஹெல்மான்ட் மாகாணம் சங்கின் பகுதியிலிருந்து தனது பணியை முடித்துக் கொண்டு திரும்புகிறது.

ஆப்கானிஸ்தானில் பதட்டமான பகுதிகளில் இந்த சங்கின் பகுதியும் ஒன்று. கடந்த 4 ஆண்டுகளாக பிரிட்டிஸ் படைகள் இப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தது. இன்று அதிகாலை பிரிட்டன் நேரம் 6.30 மணியளவில் தனது பொருப்பை அமெரிக்க படையிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறுகிறது.

மற்ற பகுதியைவிட இந்தப் பகுதியில் பிரிட்டிஸ் படைகள் பெரும் நெருக்கடியை சந்தித்துவந்தது, இப்பகுதியில் மட்டும் பிரிட்டிஸ் படைவீரர்கள் 337 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோடையில் மட்டும் 5 பெரும் தாக்குதல்களை பிரிட்டிஸ் படையினர் இப்பகுதியில் சந்தித்துள்ளனர். பிரிட்டிஸ் படையினருக்கு நேர்ந்த இழப்பில் இந்த மாவட்டம் 3ம் இடத்தை பிடித்துள்ளது.