ஆப்கானிஸ்தானில் ராணுவம் குண்டுவீச்சில் 25 பொதுமக்கள் பலி

26/10/2010 16:46

ஆப்கானிஸ்தானில் பதுங்கியுள்ள தலிபான்களை அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினர் குண்டுவீசி அழித்து வருகின்றனர். ஹெல்மண்ட் மாகாணத்தில் பக்ரான் என்ற இடத்தில் வீடுகளில் அவர்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

 
ஆப்கானிஸ்தானில் ராணுவம் குண்டுவீச்சில் 25 பொதுமக்கள் பலிஅதை தொடர்ந்து அங்கு பன்னாட்டு ராணுவத்தின் விமானபடைகள் குண்டு வீசி தாக்கின. இதனால் அங்கிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
 
அதில், பொதுமக்கள் பலர் பலியாகி உள்ளனர். வீடுகள் இடிந்ததால் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை 25 பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
தோண்ட தோண்ட பிணங்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, சாவு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. இந்த தகவலை ஹெல்மண்ட் மாகாண கவுன்சில் தலைவர் பாஷல் பாரி தெரிவித்துள்ளார்.
 
குண்டுவீச்சில் வீடுகள் மட்டுமின்றி மசூதியும் இடிந்து தரைமட்டமானது. அதில் இருந்தும் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று கூறினார்
 
ஆனால், இதை பன்னாட்டு ராணுவ அதிகாரிகள் மறுத் துள்ளனர். குண்டுவீச்சில் பொதுமக்கள் யாரும் பலியாகவில்லை. மசூதி மீது குண்டுவீச்சு நடத்தப்பட வில்லை என்று தெரிவித்துள்ளனர்.
 
மாலைமலர்