ஆம்புலன்ஸை குண்டு வைத்துத் தகர்த்த நக்சலைட்கள் - 3 பேர் பரிதாப சாவு

28/11/2010 14:58

மாவோயிஸ்டுகள் வைத்த குண்டுக்கு ஆம்புலன்ஸ் சிக்கி சிதறியது. இதில் ஒரு சுகாதாரப் பணியாளர் உள்பட 3 பேர் பலியானார்கள்.

ஒரிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலாகும் இது.

இதுகுறித்து மாநில டிஜிபி மன்மோகன் பிரஹராஜ் கூறுகையில், பிராமனிகோவன் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸை நக்சலைட்கள் தாக்கி அழித்தனர். இதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் பெண் சுகாதாரப் பணியாளர் ஆவர். மற்றவர்கள் ஒரு நோயாளி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆவர்.

இந்த ஆம்புலன்ஸ் கடபூரிலிருந்து பிராமனிகோவன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது என்றார். oneindia.in