ஆர்.டி.ஓ ரைடு - பீதியில் ஆட்டோ ஓட்டுனர்கள்

04/04/2010 16:16

04-04-2010

ஆர்.டி.ஓ ரைடு - பீதியில் ஆட்டோ ஓட்டுனர்கள்

நேற்று நம் பகுதியில் ஆர்.டி.ஓ ரைடு நடைபெற்றது, பனைக்குளம் பேருந்து நிலையத்தில் நடந்த சோதனையில் சுமார் 13 ஆட்டோக்கள் முறையான ஆவனங்கள் இல்லாமல், ஓட்டுனர் உரிமம் இல்லாத டிரைவர்கள் ஆகியோர் சிக்கினர்.

இச் செய்தி கேள்விப்பட்டு புதுவலசை வரும் முன் நமதூர் ஆட்டோ மற்றும் இதர வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டு விட்டது. நேற்று மாலைவரை ஸ்டான்டில் ஒரு வாகனமும் நிறுத்தி வைக்கப்படவில்லை.