ஆளில்லா விமானம் மூலம் ஏமனை தாக்க அமெரிக்கா திட்டம்!

16/06/2011 11:36

ஏமனில் உள்ள பொதுமக்கள் அதிபருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏமனிலும், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு அல் கொய்தா தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக அமெரிக்கா கூறி வருகிறது

இன்னும் அல் கொய்தாவினர் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தவும் தயாராகி வருவதாகவும் அமெரிக்கா கூறுகிறது இந்நிலையில் அல்கொய்தாவினரை அழிக்க அமெரிக்காவின் உளவுத்துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

 

ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள வஜிரிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை அமெரிக்கா தனது ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகிறது. அதே போன்று ஏமனிலும் ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் தாக்க ரகசிய திட்டம் தீட்டியுள்ளது. இத்திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

inneram.com