ஆஸியில் முகத்திரைக்கு புதிய நிபந்தனை அமல்படுத்தப்பட்டுள்ளது

30/08/2011 15:03

 

பாதுகாப்பு காரணங்களுக்காக வேண்டி ஆஸ்திரேலிய காவல்துறையினர் கேட்டுக் கொண்டால், இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்திரையை விலக்கி காட்ட வேண்டும். என, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகளில், இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்தை மூட தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களைக் கண்டறிய, தேவைப்படின் இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்தை காவல்துறையினரிடம் காண்பிக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை தற்போது விக்டோரியா மாகாணமும் பின்பற்றியுள்ளது. இதற்கான அதிகாரம் அம்மாகாண காவல்துறையினரிடம் ஏற்கனவே இருந்த போதிலும், இனி, இரு சக்கர வாகனங்களில் வரும் சந்தேகத்திற்குரிய நபர்களையும் இப்புதிய உத்தரவின் கீழ் விக்டோரியா காவல்துறையினர் விசாரிக்க முடியும்.

இந்நேரம்