இங்கிலாந்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய கர்ப்பினி

17/10/2010 16:43

இங்கிலாந்தில் குடியேறிய 23 வயது பாகிஸ்தானிய பெண் சந்தேகத்திற்கு இடமான வகையில் உடல் முழுதும் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தபோது அவர் கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர் பெயர் ஆசியா கான் தனது திருமணத்திற்குப் பின் இங்கிலாந்தில் வந்து குடியேறினார். அவர் தனது கணவர் நவீத், மாமியார் மற்றும் 2 நாத்தனார்களுடன் தங்கி இருந்தார்.

ஆசியாவை வீட்டில் விட்டுவிட்டு ஷாப்பிங் சென்ற குடும்பத்தினர் திரும்பி வந்து பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. இதனால் அவரின் கணவர் கேட்டில் ஏறி குதித்தார். அப்போது தனது மனைவியின் உடல் தீக்காயங்களுடன் தோட்டத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே நவீத் அன்டை வீட்டார்களிடம் உதவி கேட்டு அலறியுள்ளார். இவரின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுப் பெண் நவீத் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தோட்டத்தில் உடல் கிடந்ததே தவிர தீ எதுவும் இல்லை.

Thats Tamil