இணையத்தில் மின் கட்டணம்: தமிழகம் முழுவதும் விரிவாக்கம்

02/12/2010 21:06

இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. சென்னையில் இன்று நடந்த விழாவில் மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி இந்த வசதியைத் தொடக்கிவைத்தார்.

 

 

இணையம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும் வசதி 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதலில் சென்னையில் மட்டும் நடைமுறையில் இருந்த இந்த வசதி கடந்த ஜூன் மாதத்தில் கோயம்புத்தூர் மண்டலத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

 

 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின் நுகர்வோரும் இணையத்திலேயே மின் கட்டணம் செலுத்தும் வகையில் இந்த சேவை தற்போது விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி இதைத் தொடங்கி வைத்தார்.

 

 

இணையதள முகவரி: https://www.tnebnet.org/awp/TNEB

dinamani.com