இத்தாலியில் பாதிக்கும் மேல் கள்ளத்தொடர்புகள் - ஆய்வுத்தகவல்

28/10/2010 15:34

கள்ளத் தொடர்புகள் இருப்பது உலகில் வழக்கம்தான் என்றாலும், ஒரு நாட்டில் உள்ளவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கள்ளத் தொடர்பு வைத்திருப்பார்களா...? ஆம். இத்தாலியில் தான் இந்த நிலைமை.

 

இத்தாலியில், 1981 வரை, தங்களை ஏமாற்றும் மனைவிகளைக் கொல்லும் கணவர்களுக்கு அந்நாட்டு கோர்ட்டுகள், கருணையுடன் குறைந்தபட்ச தண்டனை மட்டுமே கொடுத்து வந்தன. சொல்லப் போனால் இதுபோன்ற விஷயங்களில் நடக்கும் கவுரவக் கொலைகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கூட இருந்தது. ஆனால், சமீபத்தில் "இத்தாலி குடும்ப வக்கீல்கள் கூட்டமைப்பு' சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 55 சதவீத ஆண்களும், 45 சதவீத பெண்களும், தங்கள் திருமணத்துக்குப் பின் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டிருப்பது தெரிந்துள்ளது. அதிலும், ஐந்தில் மூன்று பங்கு கள்ளத் தொடர்புகள் அலுவலகங்களில் தான் ஆரம்பிக்கின்றன. நண்பகல் 2 மணியில் இருந்து 3 மணி வரையிலான மதிய உணவு இடை வேளையின் போது, பல அலுவலகங்களில் பலர் ஜோடி ஜோடியாக வெளியே கிளம்பி விடுகின்றனர். தினமலர்