இந்திய விமானப்படையில் குரூப் டெக்னிக்கல் படைவீரராக பணியாற்ற ஆட்கள் தேர்வு, விண்ணப்பிக்க 8-11-10 கடைசி நாள்

26/10/2010 16:58

இந்திய விமானப்படை யில் குரூப் “ஓ” டெக்னிக்கல் பிரிவுகளில் படைவீரராக பணியாற்ற தேர்வுநடைபெற உள்ளது. 01.04.1990 முதல் 31.05.1994-ம் தேதிக் குள் பிறந்த தமிழகம் மற்றும் புதுவை மாநில திருமணமாகாத இளைஞர் கள் பிப்ரவரி 2011-ல் நடைபெற உள்ள தேர்வு மூலம் குரூப் “ஓ” டெக்னிக்கல் டிரேட்களில் படைவீரராக பணியாற்றும் வாய்ப்பை பெற வரவேற்கப்படுகிறார்கள்.

 
10 மற்றும் பிளஸ்-2 இன்டர்மீடியட் படிப்பில் கணிதம் மற்றும் இயற் பியல் பாடங்களுடன் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியிருக்க வேண்டும். (அல்லது) அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் இன்ஸ்ட்டிட்யூட்டில் மூன்று வருடம் டிப்ளமோ படிப்பில் (மெக்கானிக்கல் -எலக்ட்ரிக் கல்-எலக்ட்ரானிகல்- ஆட்டோ மொபைல்- கம்ப்யூட்டர் சயின்ஸ்- இன்ஸ்ட்ரூமென்டேஷன் - இன்பர்மேஷன்-டெக்னா லஜி பிரிவுகள் மட்டும்) குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியிருக்க வேண்டும்.
 
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 08.11.2010. விளம்பரம், வேலைவாய்ப்பு, பாடத் திட்டம், மாதிரி வினாத்தாள், தேசிய அளவிலான தேர்ச்சி பட்டியல், மற்றும் சேர்க்கை பட்டியல் ஆகியவைகளுக்கு பார்க்க வெப்தளம் மேலும் விபரங்களுக்கு 8, எர்மென் செலக்ஷன் சென்டர், ஏர்போர்ஸ் ஸ்டேஷன் தாம்பரம், சென்னை-600 046, தொலைபேசி எண்: 044-22791853.
 
விமானப்படையில் வீரர் தேர்வு இலவசமாகவும் நேர்மையாகவும் தகுதி அடிப்படையில் மட்டுமே நடைபெறுகிறது. யாருக்கும் பணம் தரத்தேவையில்லை. ஏஜெண்ட்டுகள் என யாரையும் நம்பி ஏமாற்றத்திற்கும், தேவை யற்ற ஒழுங்கு நடவடிக் கைக் கும் ஆளாகாதீர்கள். ராம நாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி உள்ள இளை ஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயன்பெறு மாறு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மாலைமலர்