இந்திய விமானப்படையில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வேலை

30/05/2011 16:39

 

இந்திய விமானப்படையில் குரூப் ஒய் (நான் டெக்னிக்கல்) பிரிவில் ஏர்மேனாக பணியாற்ற திருமணமாகாத இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

 

கல்வித்தகுதி: அறிவியல், கலை அல்லது வணிகவியல் பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.1991-க்கும் 28.02.1995-ஆம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

உடல்தகுதி: உயரம் 152.5 செ.மீ, மார்பளவு- 5 செ.மீ, விரிவு, எடை-உயரம் மற்றும் வயதுகேற்ற எடை.

 

 

தேர்ந்தெடுக்கப்படும் முறை;
எழுத்துதேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 

தேந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 12 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும்.

 

தேர்வு மையங்கள்: சென்னை, பெங்களூர், மும்பை, கொச்சி.

மேலும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றிய விவரம் மே 14-20 தேதியிட்ட எம்ப்ளாமென்ட் நியூஸ் இதழையோ அல்லது www. indianairforce.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

பூத்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சாதாரண தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி;

President, Central Airmen Selection Board, Post Box No.11807, New Delhi - 110010.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்; ஜூன் 10.

தினமணி.காம்