இந்திய ஹஜ் பயணிகள் 29 பேர் மரணம்

01/11/2010 16:21

 

சவுதி அரேபியாவில் முஸ்லிம்களின் புனித நகரமான மெக்காவுக்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து ஹஜ் பயணிகள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள்.

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான ஹஜ் பயணிகள் மெக்காவிற்கு சென்று உள்ளனர்.
 

 

இவர்களில் 29 பேர் நோய் காரணமாக மரணம் அடைந்தனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து சென்ற 8 பேர், பீகார் மாநிலத்தில் இருந்து 6 பேர்,

கேரள மாநிலத்தில் இருந்து 4 பேர், மேற்கு வங்காளத்தில் இருந்து 3 பேர், அசாம் மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தலா 2 பேர், ராஜஸ்தான், குஜராத், மராட்டிய மாநிலத்தில் இருந்து ஒருவர் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து சென்ற பயணி ஒருவரும் பலியாகி உள்ளனர்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

nakkheeran.in