இந்தியாவின் மிகப்பெரிய மசூதி கேரளத்தில் கட்டப்படுகிறது

09/02/2011 20:17
இந்தியாவின் மிகப் பெரிய மசூதி கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடில் கட்டப்படவுள்ளது. இந்த பிரமாண்டமான மசூதியை சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 ஏக்கர் பரப்பளவில் கட்ட திட்டமிட்டுள்ளோம் என்று அதன் கட்டடக்கலை வடிவமைப்பாளர் ரியாஸ் முகம்மது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

 

இந்த மிகப்பெரிய மசூதி முகலாயர் கால கட்டடப் பாணியில் அமைக்கப்படும் என்றும், மசூதியில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம் என்றும் அவர் கூறினார். மேலும், கருத்தரங்கு நடத்துவதற்கான ஆடிட்டோரியம் மற்றும் பெரிய நூலகமும் மசூதி வளாகத்தி்ல் கட்டப்படும் என்றும், 1000 பேர் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்படும் என்றும் ரியாஸ் முகம்மது கூறினார். அடுத்த 5 மாத காலத்திற்குள் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் மசூதி கட்டி முடிக்கப்படவுள்ளது.

தினமணி 9-02-2011