இந்தியாவில் புதிய அடையாள அட்டை - புதுவலசை ஊராட்சி

25/09/2009 15:50

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

25-9-2009

இந்தியாவில் புதிய அடையாள அட்டை முறையை இந்திய அரசாங்கம் கொண்டுவர உள்ளது.  இந்த அடையாள அட்டை முறை நடைமுறைக்கு வந்தால் வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளைப் பயன் படுத்துவதைப் போல் இந்த அட்டையை எங்கும் பயன் படுத்த முடியும். அது மட்டுமின்றி இந்த அடையாள அட்டையின் தகவல்கள் அனைத்தும் கணிணி மயமாக்கப் படும் என்பதால் யாருடைய தகவலையும் மிக எளிதில் எடுத்துவிட முடியும்.

இந்த அடையாள அட்டைமுறை இந்தியவில் முதன் முதலாக கடலோர மாவட்டங்களில் நடைமுறைக்கு வருகிறது. இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபால் போன்ற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களை கண்டுபிடிக்கவும். சமூக விரோர செயல்களை தடுக்கவும் இந்த அடையாள அட்டைமுறை உதவும் என அரசு நம்புகிறது.

இந்த திட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டமும் கடலோர மாவட்டத்தில் வருவதால் நமதூரில் நாளை 26-9-2009 சனிக்கிழமை புதிய அடையாள அட்டைக்கு தகவல் சேமிக்கும் (புகைப்படம், கைரேகை போன்ற) பணி நடைபெற இருக்கிறது. நமதூர் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரும்படியும், இந்தப் பணி முழுமையடைய வேண்டும் என்பதால் நமதூர் வாசிகள் நாளை வீட்டில் தங்கி தங்களின் தகவல்களை பதிவு செய்துகொள்ளும் படி புதுவலசை ஊராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.