இந்தியாவை கேலி செய்த ஹிலாரி: அம்பலப்படுத்தியது "விக்கிலீக்ஸ்"

30/11/2010 14:32

அமெரிக்க தூதரக அதிகாரிகள் பல்வேறு நாடுகளையும், அதன் தலைவர்களையும் உளவு பார்த்து விமர்சித்து அனுப்பிய தகவல்களை அம்பலப்படுத்திய "விக்கிலீக்ஸ்" இணைய தளம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா மேற்கொண்ட முயற்சியை ஹிலாரி கிளின்டன் கேலி செய்ததையும் அம்பலப்படுத்தியுள்ளது.

ஆசியாவிலிருந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கான நாடுகளில் தாம்தான் முதலாவதாக இருப்பதாக இந்தியா தன்னைத்தானே கூறிக்கொள்வதாக ஹிலாரி கேலியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பான விவரங்களை திரட்டி அனுப்புமாறு தனது தூதரக அதிகாரிகளுக்கு ஹிலாரி உத்தரவிட்டுள்ளதாகவும் "விக்கிலீக்ஸ்" வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஆகமொத்தம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிபர் ஒபாமா அறிவித்ததெல்லாம் வெறும் கண்துடைப்பே என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. webdunia.com